Posts

சாத்தான்குளம், திசையன்விளையில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 5 வாலிபர்கள் கைது: 7 பைக்குகள் பறிமுதல்

சாத்தான்குளம்: சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை பகுதிகளில் தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 5 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 7 பைக்குகளை மீட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம்,  தட்டார்மடம், நெல்லை மாவட்டம்,  திசையன்விளை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடை வீதியில்  நிறுத்தப்பட்டிருந்த பைக்குகள் மர்ம கும்பலால் திருடப்பட்டன. இதுதொடர்பாக  பாதிக்கப்பட்டவர்கள் சாத்தான்குளம், தட்டார்மடம், திசையன்விளை போலீசில் புகார் கொடுத்தனர்.  அதன்பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் தட்டார்மடம் பயிற்சி  எஸ்ஐ ஜெயராஜ் தலைமையில் போலீசார் தட்டார்மடம், சாத்தான்குளம்  பகுதியில் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாத்தான்குளத்தில்  சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் திசையன்விளை மகாதேவன்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்த முருகன் மகன்  கிருஷ்ணன் (21) என்பதும், தனது நண்பர்களுடன் சேர்ந்து மேற்கண்ட பைக் திருட்டு சம்பவங்களில் ஈ...

சாலைப்புதூர் ஆசீர்வாதபுரம் CSI ஆலயங்களில் சுவிசேஷ ஞாயிறு

Image
சாலைப்புதூர்                                                                                                                                 ஆசீர்வாதபுரம்  

கருங்கடல் ஆலயத்தில் அசனம் : (நேற்று)

Image

ம.பி.,யில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்ற 10, 12ம் வகுப்பு மாணவர்கள்

ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வியில் படித்த மாணவர்கள், தேர்வு எழுதாமலே, ௧௦, ௧௨ம் வகுப்புகளில், தேர்ச்சி பெற்ற மோசடி குறித்த தகவல் அம்பலமாகி உள்ளது.   என்.ஐ.ஓ.எஸ்., எனப்படும், தேசிய திறந்த நிலை பள்ளி நிறுவனம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. தன்னாட்சி அதிகாரம் பெற்ற இந்நிறுவனம் சார்பில், திறந்த நிலை அடிப்படை கல்வி திட்டத்தில், மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு, ௧௦ம் வகுப்பு, ௧௨ம் வகுப்பு தேர்வுகள், ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.புகார்இந்த ஆண்டு, மார்ச் - ஏப்ரலில் நடந்த, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளில், நாடு முழுவதும், இரண்டு லட்சத்துக்கு அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதினர்.முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கும், ம.பி.,யில், திறந்த நிலை பள்ளி கல்வி தேர்வில், முறைகேடு நடந்ததாக புகார் கூறப்பட்டது. தேர்வு எழுதாமலேயே, ௧௦, ௧௨ம் வகுப்பு மாணவர்கள் பலர், தேர்ச்சி பெற்றுள்ளதாக புகார்கள் வந்தன. இது பற்றி விசாரிக்க, மூன்று பேர் கமிட்டியை, திறந்த நிலை கல்வி நிறுவனம் நியமித்தது...

பேய்க்குளத்தில் சமீபத்தில் உதயமான ஸ்தாபனங்கள்

Image

ஆதார் எண் இணைக்காத சிம் கார்டுகள் 2018 பிப்.,க்கு பின் செயலிழப்பு

ஆதார் எண்ணுடன் இணைக்காத சிம்கார்டுகள் 2018-ம் ஆண்டு பிப்ரவரிக்குப்பின் செயலிழக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு பிப்ரவரியில் சுப்ரீம் கோர்ட் வழி காட்டுதலின் படி சிம்கார்டுகள் டி ஆக்டிவேட் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகளுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. பான் எண் இணைப்பு, ஓட்டுநர் உரிமம் போன்றவற்றுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஆதார், கடைசியாக இறப்பை பதிவு செய்வதற்கும் கட்டாயமாக்கப்பட்டது. இதனிடையே, இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாலும், பல்வேறு முக்கிய விஷயங்களுக்கு மொபைல் பயன்படுத்துவதாலும், சிம் கார்டு பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயமாக்க வேண்டும் என்று லோக்நிதி என்ற தன்னார்வு அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கடந்த பிப்ரவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாட்டில் உள்ள அனைத்து சிம் கார்டுகளையும் ஆதார் எண்ணுடன் இணைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது. இதையடுத்து, வருகின்ற ப...

வேதாகம உண்மைகள்

Image