திருச்செசந்தூர் அருகே கடலில் மூழ்கி நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக் மாணவர் உட்பட இருவர் பலி

திருச்செந்தூர் அருகே கடலில் மூழ்கி சுற்றுலா வந்த மாணவர்கள் இருவர் பலியாயினர்.தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தை சேர்ந்தவர் ரிபாயத். இவரது குடும்பத்தினர் நேற்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் விதமாக திருச்செந்தூரை அடுத்துள்ள சுற்றுலாமையமான மணப்பாடு கடற்கரைக்கு சென்றனர். அங்கு சிலர் கடலில் குளித்தனர். இதில்ஆழமான பகுதியில் 5 பேர் சிக்கிக்கொண்டனர். அங்கு குளித்துக்கொண்டிருந்தவர்கள் மூவரை மீட்டனர்.ரிபாயத்தின் மகன்கள் வர்ஷாஅகமது 17, ஷாலிக் 15 ஆகியோர் நீரில் மூழ்கினர்.அவர்களை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செசல்லும் வழியில் பரிதாபமாகஇறந்தனர். வர்ஷா அகமது, நாசரேத்தில் உள்ள பாலிடெக்னிக்கில் பயின்றுவந்தார்.ஷாலிக், காயல்பட்டணத்தில் பத்தாம் வகுப்பு பயின்றுவந்தார். ஒரே குடும்பத்தினர் இருவர் இறந்தசம்பவம் காயல்பட்டணத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. சம்பவம் குறித்து குலசேகரபட்டணம்போலீசார் விசாரித்தனர்.

Comments

Popular posts from this blog

SSLC 100 ONE WORD

Thoothukudi dt Quarterly SSLC ANSWER KEY 2025