Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Tuesday, 27 June 2017

அப்பல்லோ மருத்துவமனை சார்பில் சென்னையில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவை துவக்கம்


சென்னையில் முதன்முதலாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இதனை செயல்படுத்தியுள்ளது. அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை அருகிலுள்ள மைதானத்திற்கு கொண்டு வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு விரைவாக கொண்டு செல்ல வழிவகுக்கப்பட்டு உள்ளது. 

இந்த புதிய வசதியை சென்னையில் சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இந்த ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸில் 2 பைலட் 2 மருத்துவர்கள் இருப்பர். மற்ற ஹெலிகாப்டர்களை காட்டிலும் இது அதிக வேகத்துடன் பறக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மூவைச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை மற்றவருக்கு பொருத்துவதற்கு விரைந்து எடுத்துச்செல்ல இந்த ஹெலிகாப்டர் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏற்கனவே கோவையில் இவ்வகை ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment