Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Saturday, 1 July 2017

சென்னையில் 10 அஞ்சலகங்களில் ஆதார் அட்டைகளில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்

சென்னையில் 10 அஞ்சலகங்களில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல்களில் திருத்தம் செய்து விவரங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் பொதுமக்கள் தங்கள் விவரங்களை மேம்படுத்துவதற்கான வசதியினை அஞ்சலகங்கள் மூலம் நடைமுறைப்படுத்த, இந்திய அஞ்சல் துறை, 'உடாய்' (இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம்) உடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன் படி சென்னையில் பத்து அஞ்சலகங்களில் பொதுமக்கள் தங்கள் ஆதார் அட்டை தகவல்களில் திருத்தம் செய்து விவரங்களை மேம்படுத்திக்கொள்ளலாம். ஜூலை 3-ம் தேதி முதல் பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதற்கான ஏற்பாடுகளை இந்திய அஞ்சல் துறை செய்துள்ளது. இந்த வசதி வழங்கப்பட்டுள்ள சென்னை அஞ்சல் அலுவலகங்கள் பற்றிய விவரம் வருமாறு:

1. சென்னை தலைமை அலுவலகம் (ஜி.பி.ஓ), 2.அண்ணா சாலை தலைமை அஞ்சலகம், 3.தி.நகர் தலைமை அஞ்சலகம், 4.மைலாப்பூர் தலைமை அஞ்சலகம், 5.பரங்கிமலை தலைமை அஞ்சலகம், 6.பூங்கா நகர் தலைமை அஞ்சலகம், 7.தேனாம்பேட்டை துணை அஞ்சலகம், 8.அண்ணாநகர் துணை அஞ்சலகம், 9.அசோக் நகர் துணை அஞ்சலகம், 10. திருவல்லிக்கேணி துணை அஞ்சலகம்.

மேலும், இந்த வசதி தமிழகத்தில் உள்ள 2515 அஞ்சலகங்களில் படிப்படியாக விரிவுபடுத்தப்பட உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment