Menu

Saturday 1 July 2017

ஆறுமுகநேரியில் அறிவியல் கண்காட்சி இரயில் : குவிந்தனர் தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள்

வாகனத்தில் இருந்து இறங்கி காத்திருந்த மாணவ. மாணவியர்கள்

இதாங்க அந்த ஸ்டேஷன் நுழைவாயில்

பந்திக்கு முந்தி சார்மினார் பந்தலில் இடம் பெற்றுக் கொண்ட மாணவ மாணவியர்


இடம் கிடைக்காதோருக்கு வேப்பமரமே அடைக்கலம்

 பார்க்க வந்த மாணவர்கள் சாப்பிட கிடைத்த இடம் - பாழான கட்டிடம் (8ஆம் நம்பர் வீடு - அந்த கட்டிடத்தில் எழுதி இருந்த வார்த்தைகள்)

                                  எல்லாம் வெற்றுக்கேன் -தண்ணிர் இல்லை
               தண்ணீர் இல்லாமல் தன்ணீர் பாக்கெட் வாங்கி வரும் மாணவர்கள்

                                              வந்திருந்த கூட்டத்தின் ஒரு பகுதி



                             அப்பாடா ஒரு வழியா பிளாட்பார்முக்குள் வந்தாச்சு
                                                  என்னது இங்கயும் லைனா
 உள்ளயும் சார்மினார் பந்தலா? இன்னும் ஒரு மணி நேரம் ஆகுமா?


                                     ஒரு வழியா அந்த ரெயில பார்த்தாச்சுப்பா




இரயிலே இது வரை பார்க்காத மாணவர்களுக்கு இது ஓ.கே, இரயிலை முதன் முதலில் பார்த்த கிராமத்து மாணவர்கள் ஓடும் காட்சி.
போனதுக்கு இது மட்டும்தான் ஃபோட்டோ எடுக்க விட்டாங்க.(இரயிலுக்கு வெளியே)



தூத்துக்குடி மாவட்டத்தில் மத்திய அரசால் நிறுவப்பட்ட அறிவியல் கண்காட்சி இரயில் ஆறுமுகநேரியில் 28.06.207 – 30.06.2017 வரை நின்றிருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தின் மூலை முடுக்கில் உள்ள பள்ளிகள் எல்லாம் தங்கள் பள்ளியில் உள்ள மாணவர்களை அழைத்து வந்திருந்தனர். அந்த மூன்று நாட்களும் ஆறுமுகநேரியே விழாக்கோலம் பூண்டிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். இரயில் நிறுத்தம் முழுவதும் மாணவர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
மாணவர்கள் ஒரு 20 நிமிடம் அந்த அறிவியல் கண்காட்சியை பார்க்க கால் கடுக்க, பகல் நிலவொளியில் காலையிலிருந்தே 3 மணி, 4 மணி வரை காத்திருந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு நிலவரத்தை புரிந்து கொண்டு ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்த சார்மினார் பந்தலின் கீழ் அமர்ந்தனர். திரளாய் வந்த கூட்டத்திற்கு அத்துனூண்டு சார்மினார் பந்தல் எம்மாத்திரம். சார்மினார் பந்தலில் இடம் கிடைக்காத மாணவர்கள் அருகில் நின்றிருந்த வேப்ப மரங்களின் கீழ் தஞ்சம் புகுந்தனர். மூன்றாவது நாள் வரையில் 325 பள்ளிகளுக்கு மேல் வந்து பார்வையிட்டுள்ளனர். ஆனால் பரிதாபம் வந்திருந்த மாணவர்களின் அவசரத் தேவைகள் மற்றும் அத்தியாவசியத் தேவைகள் கூட நிறைவேறாத சூழ்நிலையில் தண்ணீருக்காகவும், இயற்கை உபாதையை கழிப்பதற்காகவும் அல்லாடினார்கள். ஒவ்வொரு பள்ளியாக அழைத்து பிளாட்பார்முக்குள் அனுமதித்தார்கள். உள்ளே சென்ற பின்பும் மாணவர்கள் ஒரு சுற்று சுற்றி இரயில் நிற்கும் இடத்தை அடைய ஒரு ¾ மணி நேரம். ஃசெல்போனில் படம் பிடிக்கக் கூடாது, செல்போனை அணைத்து உள்ளே செல்லுங்கள் என்ற பல கெடுபிடிகளுக்கு மத்தியில் இறுதியாக ஒருவழியாக இரயிலுக்குள் நுழைய மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு படம் எடுக்க விட்டால் கூட படம் எடுக்கும் அளவிற்கு எந்த சிதம்பர இரகசியமும் இல்லை.
இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி தியங்கி போய் உள்ளே நுழைந்த மாணவர்களுக்கு ஏதாவது பிரயோஜனம் உண்டா? இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இரயிலின் அனைத்து பெட்டிகளிலும் பருவ கால மாற்றங்கள் குறித்த படங்களும் அவைகள் குறித்த விளக்கங்கள் ஆங்கிலத்திலும் , அதை ஆங்கிலத்தில் விளக்கி சொல்வதற்கு தமிழ் தெரியாத ஹிந்தி நபர்களும் இருந்தார்கள். ஒரு கேரேஜை படித்து கடப்பதற்கே அரை மணி நேரம் ஆகும். ஆனால் நிற்பதற்கு கூட நேரம் தராமல் ’கோ’, ‘கோ’ என்ற விளக்கம் தான் கேட்டது. மொத்த இரயிலையே ஒரு பள்ளி மாணவர்கள் 20 நிமிடத்தில் முடித்து வெளியே அனுப்பபட்டார்கள். வெளியே வந்த மாணவர்களிடம் என்ன பார்த்தீர்கள் என்று கேட்டுப் பாருங்கள் ‘ ஒரு புலி, ஒரு கரடி, ஒரு சைக்கிள் பெடல், ஆங்காங்கே சில டி.விகள்’ அவ்வளவுதான் நம்ம பிள்ளைகள் சொல்லும்.
இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு என்ன பிரயோஜனம்? 20 நிமிட ஏ.சி யும், இதுவரை இரயில் பார்க்காத மாணவர்கள் இரயிலைப் பார்த்ததும் தான் மிச்சம்.
இதற்கு நம்ம திருநெல்வேலி சயின்ஸ் செண்டர் எவ்வளவோ பரவாயில்ல.

No comments:

Post a Comment