Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Saturday, 8 July 2017

காது கேளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவு.


காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரில், பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்கு, 1989ல் இருந்து பயணப்படியாக, 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 2010ல், பயணப்படி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்த படி, தற்போது, காது கேளாத ஊழியர்களுக்கும் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், 'காது கேளாத ஊழியர்கள், அரசு மருத்துவமனையில் சான்று பெற்று வழங்கினால், படியை அனுமதிக்கலாம். பணிபுரியாத காலங்கள், மருத்துவ விடுப்பின் போது பயணப்படி வழங்கக் கூடாது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment