Menu

Saturday, 8 July 2017

இணைய பாதுகாப்பில் இந்தியாவுக்கு 23-வது இடம்

சர்வதேச அளவில் இணையதள பாதுகாப்பில் இந்தியா 23-வது இடத்தைப் பிடித்துள்ளதாக ஐ.நா. தொலைத்தொடர்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச தொலைத்தொடர்பு யூனியன் (ஐடியு) 2-வது சர்வதேச இணையதள பாதுகாப்பு குறி யீட்டை வெளியிட்டுள்ளது. இதன்படி, இணையதள பாதுகாப்பு ஏற்பாடுகள் அடிப்படையில் 165 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், இந்தியா 0.683 புள்ளிகளுடன் 23-வது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தப் பட்டியலில் சிங்கப்பூர் 0.925 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, மலேசியா, ஓமன், எஸ்டோனியா, மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, ஜார்ஜியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகியவை முதல் 10 இடங்களைப் பிடித்த நாடுகள் ஆகும். ரஷ்யா 11-வது இடத்தில் உள்ளது.

No comments:

Post a Comment