Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 13 July 2017

நெல்லையில் ஜூலை 14ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்


நெல்லை : நெல்லை கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறியிருப்பதாவது: நெல்லை மாவட்டவேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஜூலை 14ம் தேதி பிற்பகல் 3 மணிக்கு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது. அப்போது நெல்லை மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனங்களில் வேலை அளிப்போர் வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரடியாக வந்து தங்கள் நிறுவனங்களுக்கு தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்கின்றனர். தனியார் ேவலைவாய்ப்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்2, பட்டப்படிப்பு, ஓட்டுநர்கள், டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதி உடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம்.

14ம் தேதி நடக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள நெல்லை மாவட்டத்தை சார்ந்த பதிவுதாரர்கள் மற்றும் தனியார் நிறுவன பிரதிநிதிகள் அன்று பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் தங்கள் தேவை விவரங்களை நெல்லை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ உடனே தெரிவிக்கலாம். தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு அலுவலகத்தால் தவறாது நடத்தப்படும். இந்தப் பணி முற்றிலும் இலவசமாகும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment