Menu

Saturday 29 July 2017

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி


இலங்கை அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெற்று வந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 600 ரன் குவித்து ஆல் அவுட்டானது. தவான் 190, புஜாரா 153, ரகானே 57, அஷ்வின் 47, ஹர்திக் 50, ஷமி 30 ரன் விளாசினர். இலங்கை பந்துவீச்சில் நுவன் பிரதீப் 6, லாகிரு குமாரா 3, ஹெராத் 1 விக்கெட் வீழ்த்தினர். 

அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 2ம் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 154 ரன் எடுத்திருந்தது. 

மேத்யூஸ் 83 ரன் எடுத்து (130 பந்து, 11 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா சுழலில் கோஹ்லி வசம் பிடிபட்டார். ஒரு முனையில் தில்ருவன் உறுதியுடன் போராட, கேப்டன் ஹெராத் 9 ரன், பிரதீப் 10, குமாரா 2 ரன்னில் ஆட்டமிழந்து அணிவகுத்தனர். 



இலங்கை அணி 78.3 ஓவரில் 291 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தில்ருவன் 92 ரன் (132 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் ஜடேஜா 3, ஷமி 2, உமேஷ், அஷ்வின், ஹர்திக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 

இதைத் தொடர்ந்து, பாலோ ஆன் தராமல் 309 ரன் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தவான் 14 ரன், புஜாரா 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர். 

அபினவ் முகுந்த் - கேப்டன் கோஹ்லி ஜோடி 3வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 133 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்தனர். முகுந்த் 81 ரன் எடுத்து (116 பந்து, 8 பவுண்டரி) குணதிலகா பந்துவீச்சில் ஆட்டமிழக்க 3ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது, கோஹ்லி 76 ரன்னுடன், ரஹானே 4-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட்கோலி தனது 17-வது டெஸ்ட் சததத்தை பதிவு செய்தார். இதனையடுத்து இந்திய அணி 240 ரன்களுடன் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

 இதனையடுத்து 550 ரன்கள் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 76.5 ஓவர்களில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கருணரத்னே 97 ரன்கள் எடுத்து சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். இந்திய பந்துவீச்சில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட் வீழ்த்தினர். 

No comments:

Post a Comment