Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Tuesday, 11 July 2017

இ சேவை மையம் மூலம் விண்ணப்பித்த 48 மணி நேரத்தில் விரைவு சாதி சான்றிதழ் & புதிய பல சேவைகள்

       விரைவு சாதி சான்றிதழ்கள் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் அறிவித்துள்ளார். 


வருவாய் துறை மானிய கோரிக்கையின் போது, அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் ெவளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

  • 3.50 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் வழங்கப்படும்.
  • கடல் அரிப்பு, இடி, மின்னல், சுழல்காற்று மற்றும் சூறைக்காற்று ஆகியவற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கும் இனிவரும் காலங்களில் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து நிவாரணம் வழங்கப்படும்.
  • கலப்பு திருமண சான்றிதழ், விவசாய வருமான சான்றிதழ், சிறு, குறு விவசாயி சான்றிதழ், விதவை சான்றிதழ், வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ், குடிபெயர்வு சான்றிதழ், இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி/ கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ், ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ், திருமணமாகாதவர் என்பதற்கான சான்றிதழ், வாரிசு சான்றிதழ், வசிப்பிட சான்றிதழ், சொத்து மதிப்பு சான்றிதழ், அடகு வணிகர் உரிமம், கடன் கொடுப்போர் உரிமம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சாதி சான்றிதழ் ஆகிய 15 வருவாய் சேவைகள் கூடுதலாக இணையத்தளம் மூலமாக வழங்கப்படும்.
  • விவசாயிகளின் நலனுக்காக இ-அடங்கல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். 
  • இ-சேவை மையங்கள் மூலமாக விரைவு சேவை கட்டணமாக ரூ.250 செலுத்தி விரைவு சாதி சான்றிதழ்கள் விண்ணப்பித்த 48 மணி நேரத்திற்குள் வழங்கப்படும். 
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் களப்பணியாளர்களை ஒருங்கிணைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆண்டொன்றுக்கு ரூ.75 லட்சம் செலவு மேற்கொள்ளப்படும்.
  • ஆபத்து கால நண்பன்(ஆப்த மித்ரா) திட்டத்தின் கீழ் தன்னார்வலர்களுக்கு பயிற்சி திட்டம் வழங்கப்படும்.
  • வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக ஆளில்லா வானூர்தி மூலம் வான்வழி புகைப்படவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
  • பேரிடர்களை எதிர்கொள்ள பல்துறை நிபுணர்கள் நியமனம் மற்றும் வறட்சி கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்படும்.
  • குறுவட்ட அளவர்களுக்கு அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் கட்டப்படும்.
  • 1140 குறுவட்ட அளவர்களுக்கு 3ம் தலைமுறை தரவு அட்டை வழங்கப்படும். என்பது உள்ளிட்ட 22 அறிவிப்புகளை அமைச்சர் உதயக்குமார் வெளியிட்டார்.

No comments:

Post a Comment