இப்படித்தான் சாத்தியம்!
1967 என்ற எண்ணை, மொபைல் போன் அல்லது தொலைபேசி வாயிலாக, 'டயல்' செய்தால், 'தமிழுக்கு ஒன்றை அழுத்தவும்' என்ற பதில் கிடைக்கும். அதன்படி அழுத்தினால், 'குடும்ப அட்டை வைத்திருப்பவரா' என்ற அடுத்த கேள்விக்கு, எண், 2 ஐ அழுத்த வேண்டும்.
சேவை அதிகாரி உங்களுடன் பேசுவார். அவர் ரேஷன்கார்டின் வலது பக்கத்தின், மேற்பகுதியிலுள்ள எண்ணை கேட்பார். உதாரணத்திற்கு, 006/w/33658889 என்ற எண்ணை நாம் தெரிவித்தால், ரேஷன்கார்டிலுள்ள, ஒருவரின் ஆதார் எண்ணை, அவர் கேட்பார். ஆதார் எண்ணை தெரிவித்தால், நம் ரேஷன்கார்டில் நமக்கு தேவையான, மொபைல் எண்ணை பதிவு செய்து கொள்ளலாம்.
அல்லது ஏற்கனவே பதிவில் இருக்கும் மொபைல் எண்ணுக்கு பதிலாக, வேறு
எண்ணையும் மாற்றிக்கொள்ளலாம். இவ்வளவுதான் வேலை. இதற்காக, ரேஷன் கடையிலோ, உணவுபொருள் வழங்கல் துறை அலுவலகத்திலோ வேலைமெனக்கெட்டு காத்திருக்க வேண்டியதில்லை
No comments:
Post a Comment