ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் தொலைத்தொடர்புத் துறையில் புரட்சி செய்ய இருக்கிறது. ஏற்கெனவே 4ஜி சேவையை குறைந்த கட்டணத்தில் அளித்து கொண்டிருக்கும் ஆர். ஜியோ ரூ.500க்கு புதிய 4ஜி வோல்ட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வருகிற ஜுலை 21-ம் தேதி நடைபெற இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட்போனை எல்ஒய்எப் என்ற பிராண்டில் அறிமுகப்படுத்த இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்த புதிய ஸ்மார்ட்போன் விற்பனையை மேம்படுத்தும் விதமாக ஜியோ சம்மர் சர்பிரைஸ் மற்றும் ஜியோ ஜன் தனா தன் என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சலுகை கட்டணங்களையும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது 224 ஜிபி, 4ஜி டேட்டாவை குறைந்த கட்டணத்தில் வழங்க இருக்கிறது.
இரண்டு மாடல்களில் புதிய போனை அறிமுகப்படுத்த போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 4ஜிபி நினைவக திறன், 2.4 இன்ச் டிஸ்பிளே, 2 மெகா பிக்ஸல் கேமரா என பல்வேறு வசதிகளை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
No comments:
Post a Comment