மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி ஹைதராபாத்தில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய சிறுபான்மையினர் நலத் துறையின் கல்வி உதவித் தொகை திட்டத்தில் ஏராளமான மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர். எனினும் கல்வி உதவித் தொகையை தாண்டி மாணவிகளின் கல்விக்காக அவர்களின் பெற்றோர் அதிகம் செலவு செய்கின்றனர். இதனால் தங்கள் மகள்களின் திருமணத் துக்கு பெற்றோரால் போதுமான பணத்தைச் சேமிக்க முடியவில்லை.
இதை கருத்திற் கொண்டு மத்திய சிறுபான்மையினர் நலத் துறை கல்வி உதவித் தொகை திட்டத்தில் பட்டப்படிப்பு முடிக்கும் சிறுபான் மையின மாணவிகளின் திருமணத் துக்கு ரூ.51 ஆயிரம் நிதியுதவி வழங் கும் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு சிறுபான்மையினர் நலத்துறை இணை அமைச்சர் முக் தர் அப்பாஸ் நக்வி தெரிவித்தார்.
No comments:
Post a Comment