Menu

Thursday, 13 July 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ.72 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்


தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 133 விவசாயிகளுக்கு ரூ.72 லட்சம் இழப்பீட்டுத் தொகை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. 

இதுகுறித்து கலெக்டர் வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் 2016-17ம் நிதியாண்டு ராபி பருவத்தில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் நெல் பிசானம், சோளம், கம்பு, நிலக்கடலை, எள், உளுந்து, பச்சைப்பயறு, மக்காச்சோளம், பருத்தி, வாழை, மிளகாய், வெங்காயம் ஆகிய பயிர்களுக்கு நியூ இந்தியா அஸ்சூரன்ஸ் கம்பெனி லிட் நிறுவனம் மூலம் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்துள்ளனர். 

தற்சமயம் 2016-17ல் பயிர் காப்பீடு செய்ததில் தூத்துக்குடி மாவட்டத்தில் நெல் பிசானம் பயிரில் பிரீமியம் செலுத்தி பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் இழப்பீட்டுத் தொகை ரூ.2.17 கோடிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில், 133 விவசாயிகளுக்கு 72 லட்சத்து 5 ஆயிரத்து 778 ரூபாய் இழப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக விடுவிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை ஓரிரு நாள்களுக்குள் விவசாயிகளுக்கு விடுவிக்கப்பட உள்ளதாக சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளர்.

2016-17ல் பிரீமியம் செலுத்தப்பட்ட நெல் பிசானம் அல்லாத பிற பயிர்களுக்கு பயிர் அறுவடை பரிசோதனை திடல்களின் மகசூல் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகை கணக்கிடும் பணி நடைபெற்று வருகிறது. அவற்றுக்கான இழப்பீட்டுத் தொகையும் விரைவில் விவசாயிகளுக்கு வழங்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment