சிந்தாமணி - சின்னமூலைக்கரைப்பட்டி சாலை, மிகவும் மோசமான சூழ்நிலையில் பல வருடங்களாக காணப்படுகிறது. இந்த 4 கி.மீட்டர் சாலை சரி செய்யப்படுமானால் எவ்வளவோ நன்மைகள் கிடைக்கும்.
பேய்க்குளம் - திருநெல்வேலி செல்பவர்கள் முனைஞ்சிப்பட்டி, மூலைக்கரைப்பட்டி செல்லாமலே நேரடியாக ரமணா பாலிடெக்னிக் இருக்கும் பெருமாள்நகர் செல்ல முடியும். இதனால் மூலைக்கரைப்பட்டியின் நெரிசலைத் தவிர்த்து விலைமதிப்பான ஒரு 15 நிமிடத்தை சேமிக்க முடியும். ஆனால் இதற்கு பெரும் தடையாக இருப்பது இந்த 4 கி.மீட்டர் சாலை. இன்ற் காட்டு வழி என்று பலர் தவிர்த்தாலும் இந்த பாதை சரி செய்யப்படும் சூழ்நிலையில் இந்த வழி பிரபலமடையும். தற்போது ஒரு சிலர் அவசரத்திற்கு காரில் செல்பவர்கள் உள்ளார்கள். பெரும்பாலும் திருநெல்வேலி செல்பவர்கள் கருங்குளம் பாதை வழியே சென்று வருகின்றனர்.
அதே போல் சாத்தான்குளம் - பேய்க்குளம் - திருநெல்வேலிக்கு இந்த பாதையில் பேருந்துகள் இயக்கப்படுமானால் சாலைப்புதூர், ஆசீர்வாதபுரம், மீரான்குளம், சிந்தாமணி (2) கள், சின்ன மூலைக்கரைப்பட்டி என்னும் ஊர்கள் பயன்பெறும். இந்த பாதையில் பயணம் செய்யும் போது பெட்ரோல், டீசல் , நேரம் அனைத்தும் சிக்கனமாகும்.
No comments:
Post a Comment