Menu

Saturday 29 July 2017

தண்ணீர் லாரி மோதியதில்பத்து மாடுகள் பலி: மக்கள் மறியல்

 ஸ்ரீவைகுண்டம் அருகே தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் பத்து மாடுகள் பலியாயின.திருநெல்வேலி, துாத்துக்குடி மாவட்டங்களில் தொழிற்சாலைகளின் தேவைக்காக தாமிரபரணி ஆற்றிலும் ஆற்றுப்படுகைகளிலும் தினமும் நுாற்றுக்கணக்கான டீசல் டேங்கர் லாரிகள், தண்ணீர் டேங்கர் லாரிகளாக மாறி தண்ணீர்எடுத்துச்செல்கின்றன. நெல்லை-திருச்செந்துார் சாலையில் தினமும் விபத்துக்களும் உயிர்ப்பலிகளும் நடக்கின்றன.

நேற்று பகல் 11 மணியளவில், ஸ்ரீவைகுண்டத்தை அடுத்துள்ள தென்திருப்பேரையில் திருச்செந்துார் சாலையை கடந்த மாடுகள் மீது டேங்கர் லாரி மோதியது. இதில் பத்து மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியாயின. லாரியும் நிலைகுலைந்து கவிழ்ந்தது. அந்த பகுதி மக்கள் அங்கு கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர்.சம்பவ இடத்திற்கு வருவாய்த்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.மாடுகள் இறப்பிற்காக அதன் உரிமையாளருக்கு நஷ்டஈடு பெற்றுத்தரப்படும் எனவும் தண்ணீர் திருடும் டேங்கர் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழியளிக்கப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

No comments:

Post a Comment