Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Monday, 31 July 2017

ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள நட்டாத்தி கிராமத்தை சேர்ந்த, தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பிற்காக போராடிய நயினார் குலசேகரன், 94, காலமானார்

தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பிற்காக போராடிய நயினார் குலசேகரன், 94, காலமானார்.துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை அடுத்து உள்ள நட்டாத்தி கிராமத்தை
சேர்ந்தவர் நயினார் குலசேகரன்.இளம் வயதில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு
உள்ளார். சுதந்திரத்திற்கு பிறகு தாமிரபரணியை பாதுகாக்கவும் மணல் கொள்ளைக்கு எதிராகவும் மக்கள் நலனுக்காகவும் போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.


தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு அமைப்பின் தலைவராக செயல்பட்டார். வாரந்தோறும் திங்கள் கிழமைகளில் துாத்துக்குடி மாவட்ட மக்களின் பிரச்னைகளுக்காக போராட்டங்களில் ஈடுபட்டுவந்தார்.நேற்று அவர் காலமானார். மனைவி வெள்ளையம்மாள் ஏற்கனவே காலமாகிவிட்டார். அவரது மகன் ராஜ்குமார், மகள்கள் செல்லக்கனி, செல்வக்குமாரி ஆகியோருடன் வசித்து வந்தார்.இறுதிசடங்கு நேற்று மாலை நட்டாத்தியில் நடந்தது. சர்வ கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment