Menu

Tuesday 11 July 2017

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரானார் ரவிசாஸ்திரி: கேப்டன் கோலியின் விருப்பத்திற்கேற்ப தேர்வு


இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியுடனான ஆலோசனைக்கு பிறகு ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை அடுத்து, தலைமை பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்வதாக அனில் கும்ப்ளே கடந்த மாதம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், சாஸ்திரி, ராஜ்புட், பைபஸ், டாம் மூடி உள்ளிட்ட மொத்தம் 10 பேர் விண்ணப்பம் செய்தனர். சச்சின், கங்குலி, லட்சுமண் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழுவினர் இவர்களிடம் நேற்று நேர்காணல் நடத்தினர். டெல்லியில் நடந்த நேர்காணலில் சேவக் மட்டும் நேரில் வந்து பங்கேற்றார்.


சாஸ்திரி, ராஜ்புட், பைபஸ், டாம் மூடி ஆகியோர்  ‘ஸ்கைப்’ மூலம் ஆன்லைனில் கலந்து கொண்டு பதிலளித்தனர். பில் சிம்மன்ஸ் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். இதனிடையே இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டுள்ளார். கேப்டன் கோலியின் விருப்பத்திற்கேற்ப ரவிசாஸ்திரி பயிற்சியாளராக்கப்பட்டுள்ளார். இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் வீரர் சேவாக் தேர்வாகவில்லை. இதுகுறித்து பிசிசிஐ தெரிவித்துள்ளதாவது: முன்னாள் வீரர் ரவிசாஸ்திரி பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா - இலங்கை இடையேயான போட்டியிலிருந்து ரவிசாஸ்திரி தனது பணியை துவங்குவார். மேலும் 2019 உலக கோப்பை வரை ரவிசாஸ்திரி பயிற்சியாளராக நீட்டிப்பார். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment