Menu

Saturday 15 July 2017

கர்ம வீரர் காமராஜர் பிறந்தநாள் மற்றும் தி.மு.க செயல் வீரர்கள் கூட்டத்தால் பேய்க்குளம் திணறல்

 சர சர என்று அணிவகுக்கும் வாகனங்கள்
 தக தக’ வென்று ஜொலிக்கும் கர்மவீரர் ஐயா காமராஜர் அவர்கள் சிலை
 திமு திமு’ என்று கூடி நிற்கும் கூட்டம்.
 காலையில் இருந்தே ஒருவர் மாற்றி ஒருவர் மாலை அணிவித்துக் கொண்டே இருந்தாலும் இரவின் இரம்யமான காட்சி.
 மண்ணை விட்டு மறைந்தாலும் மக்களின் மனதில் என்றும் நிற்கும் சிலரில் ஒருவர் நம் தலைவர் காமராஜர்.
 பட பட’ என்று வெடிக்காவிட்டாலும் பூப் பூவாய் விழுந்து இரவின் இருளை போக்கும் வான வேடிக்கை.
 திமுக செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்ற பாலாஜி திருமண மண்டபம்
 தூத்துக்குடி தென் மாவட்ட தலைவராக நியமிக்கப்பட்டதும் சுழன்று சுழன்று தினமும் ஒவ்வொரு ஊர்களையும் சுற்றி வரும் அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் , திமுக கட்சிக்கு கிடைத்த வரம்.

 அண்ணன் அனிதா ராதாகிருஷ்ணன் அவர்கள் கட்சிப் பணிக்கு வரும் முன்பே  பத்திரிக்கைகளில் தினமும் அவர் பற்றிய செய்தி வரும். ஏதாவது ஒரு விளையாட்டுப்போட்டியையோ அல்லது ஏதேனும் உதவி செய்யும் விழாக்களிலோ கலந்து கொள்வார். கட்சியின் சார்பாக நில்லாமல் தனித்து நின்றாலே வெற்றிவாகை சூடும் அளவிற்கு செல்வாக்கு படைத்தவர். திருச்செந்தூர் சுற்றூ வட்டாரங்களில் திருமண வீடாக இருந்தாலும், இறப்பு வீடாக இருந்தாலும் முன்னின்று நடத்துகிறவர். விழாக்களுக்கும் போட்டிகளுக்கும் அள்ளித் தருகிறவர் என்றெல்லாம் வர்ணிக்கப்படுபவர்.
பேய்க்குளம் எல்லை முதல் திருமண மண்டபம் வரை கம்புகளில் கட்சிக் கொடிகளை கட்டி இருந்தும் சீரியல் பல்புகளும் வாகன் நெரிசல்களும், மக்களின் நடமாட்டத்தாலும், இவை எல்லாவற்றுக்கும் மேல் எங்கு பார்த்தாலும் இதே பேச்சாலும் நிசமாகவே இன்று 15.07.17 பேய்க்குளம் மூச்சுத் திணறித்தான் போய்விட்டது.

No comments:

Post a Comment