Menu

Monday 31 July 2017

ஆதார் எண்ணை - பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஆக்ஸ்ட் 31-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதா 2017-ன் படி, பான் எண் பெறவும் வருமான வரி தாக்கல் செய்யவும் ஆதார் எண் கட்டாயம் என்று கூறப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்யப்பட்ட நிதி மசோதாவின் படி, வருமான வரி கணக்கு தாக்கலின் போது ஆதார் எண் குறிப்பிடப்படுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கு இன்றுதான் (ஜூலை-31 )கடைசி நாள் என்று வருமான வரித்துறை அறிவித்த நிலையில் ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரி செல்லுத்துவோரின் சிரமத்தை கவனத்தில் கொண்டு வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 5.-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
மேலும் பயனாளர்களுக்கு ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைப்பதற்காக காலக்கெடுவை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக நேரடி வரி ஆணையமும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment