Menu

Friday, 14 July 2017

விபத்தில் சிக்கிய திருநெல்வேலி இன்ஜி.,மாணவரின் கருவிழிகள் தானமாக வழங்கிய பெற்றோர்

திருநெல்வேலி, விபத்தில் சிக்கிய இன்ஜினியரிங் கல்லூரி மாணவனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டன.
திருநெல்வேலி, தருவையை சேர்ந்தவர் சுரேஷ், கோபாலசமுத்திரம், மின்வாரியத்தில் கணக்கீட்டாளராக

பணியாற்றுகிறார். இவரது மகன் பிரம்மநாயகம் 20. சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரியில்
மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் பிரிவில் பயின்றுவந்தார். இவர் நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து

கல்லூரிக்கு தனியார் பஸ்சில் சென்றுகொண்டிருந்தார். கொழுமடை என்னுமிடத்தில்
சென்றபோது ஒரு ஸ்பீடு பிரேக்கரில் கடந்த போது படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த மாணவன்
பிரம்மநாயகம் தூக்கிவீசப்பட்டார். தலையில் அடிபட்டது. நெல்லை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு நேற்று பிற்பகலில் இறந்தார். அவரது இரண்டு கண்களும் தானம் செய்யும்
நிலையில் இருப்பதாக டாக்டர்கள் கூறினர். பெற்றோர் அதற்கு ஒப்புக்கொண்டதால், மாணவரின்
இரு கண்களின் கருவிழிகளும் தானமாக பெறப்பட்டன. தானம் வழங்கும் நிகழ்வில் இன்ஜினியரிங்
கல்லூரி மாணவர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment