Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Wednesday, 12 July 2017

பேய்க்குளம் பஜாரில் மரக்கன்று நடுவிழா : பத்திரிக்கை செய்தி




சாத்தான்குளம்  அருகேயுள்ள பேய்க்குளத்தில்  ஆட்டோ ஓட்டுநர் சங்கம் சார்பில் மரக்கன்றுகள்  நடும்விழா நடந்தது. தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் சுந்தரவேல் முன்னிலை வகித்தார். ஆட்டோ ஓட்டுநர் சங்க பிரதிநிதி செல்வராஜ் வரவேற்றார். இதைத் தொடர்ந்து மரக்கன்றுகள் நடப்பட்டன. 

இதில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னத்துரை, ஆழ்வார்திருநகரி ஓன்றிய பொதுச்செயலாளர் சரவணன், ஒன்றிய பொருளாளர் லட்சுமணதாஸ், ஆட்டோ ஓட்டுநர் சங்க நிர்வாகிகள், ஜெயமுருகன், மாரி, சக்திவேல், அகஸ்டின் விக்டர், தங்கராஜ், ராமசாமி குமார், இசக்கி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment