தமிழ்நாடு
அம்பேத்கர் சட்டப் பல்கலையின் கட்டுப்பாட்டில், ஏழு அரசு சட்டக்
கல்லுாரிகள் உள்ளன.
இவற்றில், ஐந்து ஆண்டு, பி.ஏ., - எல்.எல்.பி.,
ஒருங்கிணைந்த சட்டப் படிப்பு நடத்தப்படுகிறது. இதற்கான மாணவர் சேர்க்கை
கவுன்சிலிங், ஆக., 2 - 5 வரை நடந்தது.
அதை தொடர்ந்து, இரண்டாவது தரவரிசை பட்டியலை, சட்டப் பல்கலை வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் உள்ள, 'கட் - ஆப்' மதிப்பெண்படி, தகுதியானவர்களுக்கு, வரும், 23, 24ல், கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது; தபாலில் அழைப்பு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. தகுதி பெற்று, தபாலில் அழைப்பு வராதவர்கள், விண்ணப்பித்த ஆவணங்களுடன், பல்கலை அறிவித்துள்ள நாளில், கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்' என, மாணவர் சேர்க்கை தலைவர் பாலாஜி தெரிவித்து உள்ளார். 'கட் - ஆப்' விபரங்களை, சட்டப் பல்கலையின், tndalu.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment