Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Wednesday, 16 August 2017

தூத்துக்குடி துறைமுகத்தை ஆழப்படுத்த ரூ 3 ஆயிரத்து 462 கோடியில் புதிய திட்டம்

தூத்துக்குடி, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
துறைமுக பொறுப்புக்கழகத்தலைவர் ஆனந்த சந்திரபோஸ் கொடியேற்றினார். மத்திய தொழில் பாதுகாப்புப் படை, துறைமுக தீயணைப்பு படை, துறைமுகப் பள்ளியின் தேசிய மாணவ, மாணவியர் படை, கடற்சார் பயிற்சி மைய மாணவர்களின் அணிவகுப்பு நடந்தது. நிகழ்வில அவர் பேசுகையில், தூத்துக்குடி துறைமுகம் சரக்கு கையளாளும் திறனை கூடுதலாக 44.94 மில்லியன் டன்கள் அதிகரித்தது. இந்திய பெருந்துறைமுகங்கள் கடந்த நிதியாண்டில் மேற்கொண்ட சரக்கு கையாளும் திறன் அதிகரிப்பான 100.47 மில்லியன் டன்களில் 45 சதவீதம் தூத்துக்குடி துறைமுகத்தில் அதிகரித்ததாகும். துறைமுகத்தினை உலகளவில் மேம்படுத்தும் வகையில் சரக்கு கையாளும் திறனை  தற்போதைய 50.26 மில்லியன் டன்களில் இருந்து 2020-21ம் ஆண்டில் 182.30 டன்களாக அதிகரிக்கும். துறைமுகத்தின் தற்போதைய மிதவை ஆழமான 12.8 மீ.,
இருந்து 15.20 மீ.,ஆக அதிகரிப்பதற்கு ரூபாய் 3 ஆயிரத்து 462 கோடி செலவில் ஆழப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளது என்றார்.

No comments:

Post a Comment