Hi Readers

...... TOMORROW IS RL.....TRUST EXAM ANSWER KEY RELEASED......CSIR NET EXAM HALL TICKET CAN BE DOWNLOADED NOW....

Wednesday, 16 August 2017

நெல்லையில் கலெக்டரை அழையுங்கள் பொதுமக்கள் புகார் அளிக்க புதிய வசதி

திருநெல்வேலி, நெல்லையில் பொதுமக்கள் கலெக்டருடன் தொடர்புகொள்ள சமூகவலைத்தளங்களில் பதிவிட புதிய எண்ணை அறிமுகப்படுத்தினார்.
திருநெல்வேலியில் நேற்று நடந்த சுதந்திர தின விழாவில் கலெக்டர் சந்தீப் நந்தூரி தேசிய கொடியேற்றினார். சுதந்திர போராட்ட தியாகிகள் லட்சுமிகாந்தன் பாரதி, செல்லத்துரை ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தினார். 146 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நெல்லையில் கலெக்டராக சந்தீப் நந்தூரி பொறுப்பேற்ற பிறகு தாமிரபரணியை மேம்படுத்தும் வகையில் சுத்தப்படுத்துதல், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் "அன்புச்சுவர்' என்ற புதிய திட்டத்தை துவக்கினார். பொதுமக்கள் மனமுவந்து வழங்கும் பொருட்கள், உடைகளை தேவைப்படுவோர் தாங்களாகவே எடுத்துச்செல்வார்கள். நேற்று சுதந்திர தினவிழாவில் பொதுமக்கள் தங்கள் குறைகளை, புகார்களை, மேம்படுத்தும் தகவல்களை தெரிவிக்க புதிய வாட்ஸ்அப் எண்ணை வெளியிட்டார். "உங்கள் கலெக்டரை அழையுங்கள்' என்ற பெயரோடு 9786566111 என்ற எண்ணை அறிமுகப்படுத்தினார். வாட்ஸ்அப்புடன், ஜிமெயில், டிவிட்டர் போன்ற தளங்களில் புகார்களை தெரிவிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கலெக்டரின் இந்த முயற்சியால் புதிய எளியவர்களும் மாவட்ட நிர்வாகத்தை தொடர்புகொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment