Menu

Tuesday 22 August 2017

மரண சாலை : வி.வி கல்லூரி - திசையன்விளை மெயின் ரோடு (3 கி.மீ)







சாத்தான்குளம் - பண்டாரபுரம் - தஞ்சை நகர் - வி.வி கல்லூரி வழியே திசையன்விளை தான் short root என்று தினமும் அவ்வழியே பல்லாயிரக்கணக்கான வண்டிகள் செல்கிறது. ஆனால் பாவம் வி.வி கல்லூரி தாண்டி ஒரு 700 - 800 மீட்டர் சென்ற உடன் ஒரு மரண ரோட்டை நாம் காண முடியும். ஒன்றல்ல இந்த மரண சாலை ஒரு மூன்று கிலோ மீட்டருக்கு தொடர்கிறது. திசையன்விளைக்கு செல்லும் மெயின் ரோட்டைப் பிடிக்கும் வரை. 
ஒரு பெரிய கல்லூரி இருக்கும் இடத்திலிருந்து அப்படிப்பட்ட மரண சாலையை யாரும் எதிர்பார்க்க முடியாது. அந்த மரண சாலையில் பயணம் செய்பவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒருவராவது அந்த சாலையில் விழுந்து புரளுவர். அவ்வளவு மோசமான சாலை. ஒரு முக்கியமான ஊருக்கு செல்லும் சாலை இவ்வளவு மோசமாக இருக்க காரணம் என்ன? யாரும் கண்டு கொள்ளாமல் இருப்பதாலா? அல்லது ஏதேனும் பிரச்சனையால் வேலை நடைபெற தடை உள்ளதா?

No comments:

Post a Comment