Menu

Wednesday 23 August 2017

தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் செட்டிகுளத்தில் விபத்து

 23.08.2017, இடம்:செட்டிகுளம், நேரம் : மாலை 5 மணி

அடிபட்ட மனிதருக்கு தலையில் படுகாயம், சுயநினைவினை இழந்திருந்தார்.

செட்டிகுளம் ஊருக்கு முன்னும் அதை தாண்டியும் பல வளைவுகள் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பது சாதாரணமாகிவிட்டது. நேற்றும் கூட வேகமாக சென்ற வண்டி ஓட்டுநரின் கட்டுப்பாடு இல்லாமல் பள்ளி டிரக்கர் தலைகீழாக கவிழ்ந்திருந்தது. இன்று அவ்வழியாக சாத்தான்குளத்தில் இருந்து செட்டிகுளத்திற்கு வந்த மனிதர் அமுதுண்ணாகுடிக்கு செல்லும் விலக்கிற்கு அடுத்த வளைவில் கட்டுப்பட்டை இழந்த வண்டி , பள்ளத்தில் உருண்டு விழுந்து,  தலையில் அடிபட்டு சுயநினைவை இழந்தார். அந்த ஏரியாவில் உள்ள மனிதர்தான் போலும்.

செட்டிகுளத்தில் பல வளைவுகள் இருந்தும், அடிக்கடி விபத்துகள் நடந்தாலும் ஒரு எச்சரிக்கை போர்டு கூட இல்லை. இது ஒரு குறைதான் ஆனால் என்னதான் எச்சரிக்கை போர்டுகள் இருந்தாலும் விழுபவர்கள் வெளிவூர்வாசிகள் அல்ல உள்ளூர்வாசிகளே. எனவே ஒவ்வொருவரின் சுயகட்டுப்பாப்பாடும் எச்சரிக்கை உணர்வும் எல்லாவற்றிற்கும் மேலாக இறைவனின் அருளுமே காக்கும்.




 

 நேற்றைய சம்பவம்: தினகரன் பத்திரிக்கை செய்தி

சாத்தான்குளம் அருகே தறிகெட்டு ஓடிய டிரக்கர் கவிழ்ந்தது 

சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே தறிகெட்டு ஓடிய டிரக்கர் சாலையில் கவிழ்ந்தது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

 

சாத்தான்குளம் அருகேயுள்ள புதுக்குளம் விலக்கு பகுதியில் இயங்கி வரும் தனியார் மெட்ரிக். பள்ளியில் பேய்க்குளம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். வழக்கம்போல் நேற்று காலை டிரக்கரில் பேய்க்குளம், வெங்கட்ராயபுரம் பகுதி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். ஞானியார் குடியிருப்பை சேர்ந்த பட்டுராஜ் (39) என்பவர் டிரக்கரை ஓட்டினார்.சாத்தான்குளம் அடுத்த செட்டிகுளம் பகுதியில் சென்றபோது டிரக்கரில் வந்த மாணவி ஒருவர், தனது பிறந்த நாளையொட்டி சக மாணவிகள் மற்றும் டிரைவருக்கு இனிப்புகள் வழங்கினார்.

அப்போது டிரைவர் இனிப்பு வாங்க முயன்றபோது டிரக்கர் அவரது கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது. இதில் டிரக்கரில் இருந்த மாணவ, மாணவிகள் இடிபாடுகளில் சிக்கி அலறினர். சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்த டிரைவர் பட்டுராஜ் மற்றும் மாணவ, மாணவிகள் ஜெபெனினா(3), கிரிஜா(9), அஜய்(5), அனீஸ்(8), ஈஸ்வர்(13), முத்துக்குமார்(14), சுரேஷ்குமார்(12) ஆகியோர் சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்

No comments:

Post a Comment