Menu

Saturday, 12 August 2017

ஆசீர்வாதபுரம் பள்ளி மாணவி மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டியில் 400 மீ, 800 மீ ஓட்டத்தில் முதல் பரிசு




இவர் கடந்த ஆண்டும் மண்டல அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையிலேயே இது மகத்தான காரியம். ஏனெனில் கிராமப்புற மாணவர்கள் தூத்துக்குடி நகர மாணவர்களுடன் போட்டி போட்டு ஜெயிப்பது சாதாரண காரியம் அல்ல. வட்டார அளவிலான போட்டிகளில் ஜெயிப்பது சற்று எளிது. ஆனால் 6 வட்டாரங்களில் உள்ள மாணவர்கள் வரும் போது , குறிப்பாக தூத்துக்குடி வட்டாரப் பள்ளிகளில் உள்ள மாணவர்களுடன் மோதி ஜெயிப்பது சற்று கடினம். ஏனெனில் அங்கு பள்ளி ஆசிரியர்களுடன், மாணவர்களின் பெற்றோர்களும் இப்படிப்பட்ட விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேவையான உபகரணங்கள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் அளிப்பர். அப்படிப்பட்ட சவால்களுக்கு மத்தியில் நம் ரூரல் மாணவ, மாணவியர் அத்தடைகளை எல்லாம் தாண்டி, ஆசிரியர் அளிக்கும் உத்வேகம் மற்றும் தான் மட்டுமே எடுக்கும் முயற்சியுடன் வெற்றி பெறுவது நிச்சயமாக சாதனை தான்.

ஏன் இதை சொல்கிறேன் என்றால் சில நாட்களுக்கு முன்பாக எம் பள்ளியில் வட்டார அளவில் சதுரங்க போட்டியில் வென்ற மாணவர் ஒருவரை தூத்துக்குடி மாவட்ட அளவிலான போட்டியில் பங்கு பெற தூத்துக்குடியில் உள்ள B.M.C பள்ளிக்கு அழைத்து சென்றிருந்தேன். அப்பொழுது அம்மாணவர் முதல் லீக் போட்டியில் வென்றார். ஆனால் அதன் பின்பு 3 லீக் போட்டிகளில் அவர் தோல்வியே கண்டார். அவருடன் விளையாடிய ஜாம்பவான்களெல்லாம் பெற்றோர்களால் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு தனி மாஸ்டர்களுக்குக் கீழ் பயிற்சி எடுத்து கிளப்’களில் விளையாடி ரேட்டிங்க் பாயிண்டுகளோடு வந்தவர்கள். பாவம் நம் கிராமப்புற மாணவர்கள் (மற்ற 5 வட்டார மாணவர்கள்) ஒரு சிலரைத் தவிர அனைவருமே வீழ்ந்து போயினர். எனவே தான் இம்மாணவியின் சாதனை பெரிது என நான் கருதுகிறேன். இவர் மேலும் வெற்றி பெற வாழ்த்துகள். இம்மாணவி மேன்மேலும் போட்டிகளில் வெற்றி பெற வாழ்த்துகள். வழிகாட்டிய ஆசிரியருக்கும் வாழ்த்துகள்.

1998 காலங்களில் நம் பனைக்குளம் அண்ணன் ஜாண்சன் இரத்தினராஜா அவர்கள் தன் சொந்த முயற்சியால் 2 பனை மரங்களுக்கு இடையில் குச்சியை வைத்து தாண்டி, ஆசிரியரின் வழிகாட்டுதல்படி ஸ்டேட் லெவலில் கம்பு ஊன்றி தாண்டுதலில் முதல் பரிசு வாங்கியது, என்றும் நம் நினைவை விட்டு நீங்காது நம் மனதில் நிலைத்திருக்கும்.

No comments:

Post a Comment