சென்னை மாநகராட்சியில் குப்பைகள் அகற்றப்படாதது தொடர்பாக, ‘ஸ்வச்சதா’
செயலியில் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுவதால்,
மதிப்பெண் அடிப்படையில் தேசிய அளவில் 29-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.
நகரங்களின்
தூய்மையை உறுதி செய்யும் பொருட்டு, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு
அமைச்சகம், பொதுமக்கள் புகார்கள் மீது தீர்வு காணும் 4-ம் தலைமுறை கைபேசி
செயலியான ‘ஸ்வச்சதா’-வை வெளியிட்டது.
இந்தச் செயலி மூலம், குப்பை எடுக்கப்படாமல் இருத்தல், குப்பை ஊர்தி
வராமல் இருத்தல், குப்பைத் தொட்டி தூய்மைப்படுத்தாமல் இருத்தல், தெரு
மற்றும் சாலைகளைப் பெருக்காமல் இருத்தல், வீட்டு விலங்குகள் ஏதேனும் இறந்து
கிடந்தால், அதை எடுக்காமல் இருத்தல், பொதுக்கழிப்பறைகள் பராமரிப்பின்றி
இருத்தல் போன்றவற்றை படம் எடுத்து, புகாராக அனுப்பி வைக்கலாம். தூய்மை
நகரங்கள் தேர்வுக்கு, இந்தச் செயலியின் செயல்பாடுகளும் கணக்கில்
கொள்ளப்படுகிறது.
இது தொடர்பாக கொடுங்கையூரைச் சேர்ந்த ஒருவர் கூறியதாவது:
“மாநகராட்சியின் புகார் மைய எண் 1913-ல் புகார் செய்தால், ஊழியர்கள்
மெத்தனமாக இருப்பர். ஆனால் ‘ஸ்வச்சதா’ செயலியில் குப்பை அகற்றாதது தொடர்பாக
புகார் அனுப்பியவுடன், அந்தப் புகாரை டெல்லி வரை கண்காணிக்கும் வசதி
இருப்பதால், அடுத்த 5-வது நிமிடத்தில் குப்பைகளை அகற்றியதோடு, அந்தத்
தெருவில் நீண்ட நாட்களாக அகற்றப்படாமல் கிடந்த குப்பைகளையும்
அகற்றிவிட்டனர்” என்றார்.
29-வது இடத்துக்கு முன்னேற்றம்
இதன்
காரணமாக, ‘ஸ்வச்சதா’ செயலியைப் பயன்படுத்துவது, அதற்குத்
தீர்வுகாண்பதற்காக வழங்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில், கடந்த மே 10-ம்
தேதி 201-வது இடத்தில் இருந்த சென்னை மாநகராட்சி, தற்போது 29-வது
இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி
ஒருவரிடம் கேட்டபோது, ‘‘ஸ்வச்சதா செயலியில் புகார் தெரிவித்தால் 12 மணி
நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர்
த.கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். அதனால் புகார்கள் மீது உடனுக்குடன்
நடவடிக்கை எடுக்கப்படுவதால், நாடு முழுவதும் உள்ள 4,041 நகரங்களில், சென்னை
மாநகராட்சி 29-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
பொதுமக்கள் இந்த
செயலியை பதி விறக்கம் செய்ய, கூகுல் பிளே ஸ்டோருக்கு சென்று SWACHHATA-
MOUD என தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்யலாம்’’ என்றார்.
No comments:
Post a Comment