Menu

Friday 11 August 2017

5ம் வகுப்பு மட்டுமே படித்தவர் 18 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்தார் நெல்லையில் போலி டாக்டர் கைது

திருநெல்வேலி, நெல்லையில் 18 ஆண்டுகளாக மருத்துவம் பார்த்துவந்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி பேட்டையில் நேற்று மாநகராட்சி சுகாதாரப்பணியாளர்கள் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில்
வீடு வீடாக சென்று களப்பணியாற்றினர். பேட்டை,ரகுமான்பேட்டை, பள்ளிவாசல் தெருவில்
ஒரு வீட்டுக்குள் சுகாதாரப் பணியாளர்களை விடாமல் ஒருவர் தடுத்தார். மீறி சோதனையிட
சென்ற பணியாளர் ஒருவரை தாக்கிவிட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி விழுந்து தப்பினார். தப்பியோடிய அந்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர். மாநகராட்சி சுகாதார அலுவலர் அரசகுமார், நகர்நல அலுவலர் பொற்செல்வன்ஆகியோர் அந்த வீட்டை சோதனை செய்தபோது வீட்டுக்குள் துர்நாற்றம் வீசியது. அவர் அங்கு கிளினிக் நடத்திவந்துள்ளார். சித்த மருத்துவம், அலோபதி, ஓமியோபதி என எல்லா மருத்துவமுறைகளையும் கையாண்டுள்ளார். 500க்கும் மேற்பட்ட பாட்டில்களில் பெயர் தெரியாத மருந்துகள், களிம்புகள்,
மூலிகைகளை போட்டு வைத்திருந்தார். விசாரணையில் அவர், நெல்லை மாவட்டம் மானூரை சேர்ந்த அந்தோணியின் மகன் சந்திரபோஸ் 42, என தெரியவந்தது. 5ம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார்.
சுமார் 18 ஆண்டுகளாக தமது பெயரை சேக்முகம்மது என மாற்றிவைத்துக்கொண்டு அங்கு மருத்துவம் பார்த்துள்ளார். மருந்துகளுடன் பக்கத்து கிராமங்களுக்கும் மருத்துவம் பார்த்துள்ளார். மருத்துவம் பார்ப்பது போல விதவிதமாக புகைப்படங்கள் போட்டிருந்தார். கிளினிக்கில் அகஸ்தியர், சாய்பாபா என சகல தெய்வங்களின் படங்களும் உள்ளன. சுகாதார அலுவலரின் புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரபோசை கைது செய்தனர்.

No comments:

Post a Comment