திருச்செந்தூர்: தூத்துக்குடி அருகேயுள்ள
முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவைச் சேர்ந்த முருகன் மகன் தங்க இசக்கி
(16). நெல்லை தாழையூத்து பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு மெக்கானிக் பிரிவில்
படித்து வந்தார். இவரும் அதே பாலிடெக்னிக்கில் படித்து வரும்
ஸ்ரீவைகுண்டம் புதுமனையை சேர்ந்த முஸ்தாக் (17), சேரன்மகாதேவியைச் சேர்ந்த
பாலசுப்பிரமணியன் (17), மணிகண்டன் (17), வெங்கடேஷ் (15),
முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்த செபஸ்டியான் (19), சுத்தமல்லியைச் சேர்ந்த
ராஜேஷ் (19) ஆகியோரும் இணைபிரியா நண்பர்கள். ரயில் மூலம் நேற்று
திருச்செந்தூர் வந்த இவர்கள் இங்குள்ள கடலில் குளித்து கொண்டிருந்தனர்.
இதில் கடல்அலையில் சிக்கிக்கொண்ட தங்கஇசக்கி நீரில் மூழ்கினார். இதனால் பதறிய நண்பர்கள் நீண்டநேரம் தேடியும் தங்கஇசக்கி கிடைக்கவில்லை. தகவலறிந்து வந்த கோயில் போலீசாரும் தீவிரமாக தேடினர். இதனிடையே கடலில் மூழ்கிய தங்கஇசக்கியின் உடல் பைரவர் கோயில் அருகில் கரை ஒதுங்கியது. இதையடுத்து அங்கு சென்ற கோயில் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி, எஸ்ஐகள் பாண்டியன், சங்கரநாராயணன் ஆகியோர் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment