தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்
நேற்று பேசியபோது:
தமிழகத்தில் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை
உள்ள பள்ளிகளின் வகுப்பறைகளிலேயே உதவி கல்வி அலுவலர்களுக்கு அலுவலகம்
அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்வித்துறை அலுவலர்களுக்கு
பணியிட மாற்றம் வெளிப்படையாக விரைவில் நடத்தப்படும். மேலும் கல்வி
அலுவலர்களுக்குபுதிய வாகனங்கள் வழங்கப்படும். மாணவர்களின் செயல்பாடுகளை
பெற்றோர்கள் சுலபமாக தெரிந்துகொள்ள ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும்.
தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கத்
திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தப் பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்.
No comments:
Post a Comment