HOW TO EARN THROUGH INTERNET?
யூடியூப் சேனல்கள் மூலம் லட்ச கணக்கில் சம்பாதிக்கும் தமிழர்கள்..!
தமிழக இளைஞர்களிடம் தற்போது தொலைக்காட்சிகளைப் பார்ப்பதை விட யூடியூப்
சேனல்கள் மூலம் நிகழ்ச்சிகளைப் பார்ப்பது அதிகரித்து வருகின்றது.
தொலைக்காட்சி சேனல்கள் சீரியல்கள், ரியாலிட்டி ஷோ என அரைத்த மாவினை பல பெயர்களில் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தி வரும் நிலையில் நாம் இங்குக் காண இருக்கும் யூடியூப் சேனல் இளைஞர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டுச் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்து வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சிகளைச் செய்வதினால், யூடியூபினில் வெளியிடுவதினால் இவருக்கு என்ன லாபம் இருக்கப் போகின்றது என்று நீங்கள் கேட்கலாம். இவர்களுக்கு லட்சக்கணக்கில் ஒவ்வொரு மாதமும் வருவாயினைக் கூகுள் அளிக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?
ஒரு பக்கம் கூகுள் நிறுவனம் விளம்பரம் அளிக்கும் நிலையில் தனியார் நிறுவனங்கள் நேரடியாக இவர்களைத் தேடிச் சென்று விளம்பரம் அளித்தும் வருகின்றனர். இதனாலும் இவர்களது வருமானம் அதிகரித்துள்ளது.
எனவே இங்கு நாம் தமிழில் உள்ள சிறந்த யூடியூப் சேனல்கள் பட்டியலை இங்குப் பார்ப்போம்.
ஸ்மைல் சேட்டை
ஆர் ஜே விகேஷ் அவர்கள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கும் ஸ்மைல் சேட்டையில் அரசியல் நயாண்டி, சினிமா விமர்சனம், தேர்தலின் போது விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் எனப் பலவற்றைச் செய்து இவர்களது குழு தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தினை வைத்துள்ளது என்று கூறலாம்.
ஸ்மைல் சேட்டை யூடியூப் செனலில் மட்டும் இப்போது 35 நபர்களுக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் வருமானம் பல லட்சங்களைத் தாண்டும்.
தற்போது பிளாக் ஷீப் என்ற பெயரில் புதிய யூடியுப் சேனலினை இவர்களை நடத்தி வருகின்றார்கள். இவர்களது வருவாயும் லட்ச கணக்கில் உள்ளது.
ஸ்மைல் சேட்டை சேனலை 4,82,935 நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 56,915,715 பார்வையாளர்களை விடியோக்கள் பெற்றுள்ளன.
புட் சட்னி
புட் சட்னி குழுவினரின் சேனலில் அரசியல் மற்றும் திரைப்படங்கள் குறித்த வீடியோக்களை அதிகம் கானலாம். அதே நேரம் இவர்கள் சில நேரங்களில் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்சனைகளையும் நக்கல் நயாண்டி, சீரியஸ் என வீடியோக்களாக வெளியிடுகின்றனர்.
புட் சட்னி சேனலை 4,44,297 நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 51,019,250 பார்வையாளர்களை விடியோக்கள் பெற்றுள்ளன.
தமிழ் சினிமா விமர்சனம்
பிராசாந்த் என்பவரால் நடத்தப்பட்டு வரும் தமிழ் சினிமா ரிவிவ் பேருக்கு ஏற்றர் போலத் திரைப்பட விமர்சனங்களைத் தான் வழங்கி வருகின்றது. அதே நேரம் அவ்வப்போது திரைப்படத் துறையில் நடைபெறும் பிரச்சனைகள் மற்றும் பேட்டிகளையும் இந்தச் சேனல் அளிக்கின்றது.
முதலில் பொழுதுபோக்கிற்காக யூடியுப் சேனலில் விமர்சனம் சொல்ல துவங்கிய இவருக்கும் தற்போது முழு நேர தொழிலாகவே இது மாறியுள்ளது.
தமிழ் சினிமா ரிவிவ் சேனலை 2,02,516 நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 48,853,329 பார்வையாளர்களை விடியோக்கள் பெற்றுள்ளன.
ரெட் பிக்ஸ்
ரெட் பிக்ஸ் நிறுவனம் குறும் படங்கள், செய்தி விடியோக்கள் போன்றவற்றுக்குப் பிரபலமானது ஆகும். இவர்களது சேனலை 3,24,610 நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 175,054,947 பார்வையாளர்களை விடியோக்கள் பெற்றுள்ளன.
மெட்ராஸ் செண்ட்ரல்
அரசியல் நையாண்டி, சினிமா விமர்சனம், ஸ்பூஃப் வீடியோக்கள் போன்றவற்றுக்குப் பேர் போன சேனல் மெட்ராஸ் செண்ட்ரல் ஆகும். சேனல் துவங்கிய குறுகிய காலத்தில் அதிகச் சப்ஸ்கிரைபர் வைத்துள்ள சேனல் என்றால் அது மெட்ராஸ் செண்ட்ரல் ஆகும்.
மெட்ராஸ் செண்ட்ரல் ரிவிவ் சேனலை 7,60,533 நபர்கள் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். 75,730,841 பார்வையாளர்களை விடியோக்கள் பெற்றுள்ளன.
யூ டியூப் முதல் டியூஷன் வரை... பெண்களுக்கான எளிய தொழில் வாய்ப்புகள்!
1) ட்யூஷன் க்ளாஸ்:
நீங்கள் நன்றாகப்
படித்துத் தேர்ந்தவர்கள் என்றால், உங்களால் அதைப் பிறருக்குக் கற்றுத்தர
முடியுமென்றால் நிச்சயம் நீங்கள் ஒரு ட்யூஷன் சென்டரை ஆரம்பிக்கலாம்.
அதிகம் தேவையெல்லாம் ஒரு மொட்டைமாடியும் ஒரு கரும்பலகையும்தான். ஆனால்,
எல்லோரையும்போல சாதாரணமான ட்யூஷனாக இல்லாமல் வித்தியாசமாகச் செய்ய
வேண்டும். படிப்பை மட்டுமே சொல்லித்தரமால் குழந்தைகளை நல்வழிப்படுத்தும்
சுயமாகச் சிந்திக்கத்தூண்டும் சில அம்சங்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு விளையாட்டுகளை அறிமுகப்படுத்த வேண்டும். அப்போதுதான்
குழந்தைகள் விரும்பி வருவார்கள்.
2) யூடியூப் சேனல்:
பெண்கள்
பலரும் யூடியூப் சேனலில் கலக்கிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகச்
சமைப்பவர்கள் சமையல் குறிப்பு வீடியோக்களையும், ஒப்பனைப் பற்றி நன்கு
அறிந்தவர்கள் அழகுக் குறிப்புகளையும், குழந்தை வளர்ப்பில் தேர்ந்தவர்கள்
குழந்தை வளர்ப்பு தொடர்பான குறுப்புகளையும் வீடியோக்களாகப் பதிவிட்டு,
யூடியூப் சேனல்கள் ஆரம்பித்து யார் வேண்டுமானாலும் கலக்க முடியும்.
தேவையெல்லாம் கூகுள் அக்கவுன்ட்டும் நல்ல கேமரா திறன்கொண்ட மொபைலும்தான்.
3) டேட்டா என்ட்ரி மற்றும் காப்பி பேஸ்ட்:
இணையதளங்களில்
காப்பி-பேஸ்ட் வேலைகள் நிறையவே உள்ளன. அவற்றை வீட்டிலிருந்தே செய்வதன்
மூலம் கணிசமாகச் சம்பாதிக்க முடியும். அவர்கள் சொல்லும் இணையதளத்தின்
லிங்க்கை ஓப்பன் செய்து, அந்த லிங்க்கை காப்பி செய்து அவர்களுடைய
இன்டர்ஃபேஸில் பேஸ்ட் செய்தால் போதும். உங்களுக்கு நன்றாக டைப்பிங் செய்ய
வருமென்றால், வீட்டில் ஓய்வு நேரத்தில் டைப்பிங் செய்து வருமானம் ஈட்டலாம்.
4. ஃபேன்சி ஸ்டோர்:
உங்களுக்கு நல்ல
விற்பனை அறிவும் ஆர்வமும் இருந்தால் ஃபேன்சி ஸ்டோர் வைக்கலாம். ஃபேன்சி
பொருள்கள் எங்கிருந்து மலிவாக வாங்கலாம் என்பதைத் தெரிந்துகொண்டு,
அங்கிருந்து வாங்கி வீட்டின் அருகே சிறிய கடை அமைத்து விற்பனை செய்யலாம்.
ஃபேன்சி பொருள்களை சென்னை பாரிமுனையில் மொத்தமாக வாங்கலாம்.
இப்படி
பல வழிகளில் பெண்கள் சம்பாதிக்கலாம் என்றாலும், சம்பாதித்தப் பணத்தை
எப்படிப் பெருக்குவது எனத் தெரியாவிட்டால், வரும் வருமானம் போகும் இடம்
தெரியாமல் போய்விடும். தங்களுடைய சம்பாத்தியத்தை எப்படியெல்லாம்
திட்டமிட்டுப் பெருக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்
No comments:
Post a Comment