Menu

Monday 14 August 2017

748 கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் நியமனம்


அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 748 கம்ப்யூட்டர் ஆசிரியர்பணியிடங்கள், போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன.
 
அரசுப் பள்ளிகளை தரம் உயர்த்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, கம்ப்யூட்டர் பிரிவு வகுப்புகள் துவக்கப்பட்டன. கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், சிறப்பு தேர்வு நடத்தி நிரந்தரம் செய்யப்பட்டனர்;


பல பள்ளிகளில் இதற்கு ஆசிரியர்கள் இல்லை. தற்போது இப்பணியிடங்களை நிரப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.மேல்நிலைப்பள்ளிகளில் தொழிற்கல்வி பயிற்றுனர் (கம்ப்யூட்டர் அறிவியல்) மற்றும் கம்ப்யூட்டர் பயிற்றுனர் பணியிடங்களுக்கு பி.எஸ்சி., பி.எட்., - பி.சி.ஏ., பி.எட்.,- பி.இ., பி.எட்., என கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதன்படி, 748 கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்கள் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்படுவர். இதுவரை கம்ப்யூட்டர் பாடப்பிரிவு வகுப்புகள் இல்லாத பள்ளிகளில், துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment