Menu

Monday 14 August 2017

நம்ம ஏரியாவில் புதியதொரு கலை & அறிவியல் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டப்படது


உடன்குடி: தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் சார்பில் வெள்ளாளன்விளையில் புதிதாக அமைக்கப்படும் அசரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார். தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலத்துக்கு உட்பட்ட வெள்ளாளன்விளை சேகரம் சார்பில் வெள்ளாளன்விளையில் புதிதாக பேராயர் அசரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்தது. இதில் பங்கேற்க வந்த பேராயர் தேவசகாயம், அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோருக்கு ஊர் எல்லையில் இருந்து மக்கள் சார்பில் வரவேற்பளிக்கப்பட்டது.

தொடர்ந்து நடந்த விழாவிற்கு சீயோன்நகர் சேகரகுரு தனசீலன் ஆரம்ப ஜெபம் செய்தார். வெள்ளாளன்விளை சேகர குரு மோசஸ் ஜெபராஜ் வரவேற்றார். திருமண்டல பேராயர் தேவசகாயம் முதல் செங்கலை ஆசீர்வதிக்க  எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினார்.
 திருமண்டல செயலாளர் ராஜன், திருமண்டல கல்லூரிகளின் செயலாளர் ஜெபச்சந்திரன், முன்னாள் எம்.பி ஜெயசீலன், ஜான்தாமஸ் சபைமன்றத் தலைவர் கோல்டுவின், திருச்செந்தூர் சேகரத் தலைவர் தாமஸ், சேகர குருவானவர்கள் லூர்துராஜ் ஜெயசிங், தேவராஜ் ஞானசிங், மனோன்மணியம் சுந்தரனார் ஓய்வுபெற்ற துணைப் பதிவாளர் பாலகிருஷ்ணன், ஓய்வுபெற்ற பேராசிரியர் சாமுவேல், டாக்டர் தம்பிராஜ், திருமண்டல செயற்குழு உறுப்பினர்கள் ராஜசேகர், எட்வர்ட் உள்ளிட்ட பலர் வாழ்த்திப் பேசினர்.

விழாவில் ஒன்றிய திமுக செயலாளர்கள் உடன்குடி பாலசிங், திருச்செந்தூர் செங்குழி ரமேஷ், உடன்குடி நகரச் செயலாளர் ஜான் பாஸ்கர், வக்கீல் கிருபாகரன் மற்றும் சாரதி, ஹென்றி, வெள்ளாளன்விளை ஊர் கமிட்டி தலைவர் ஞானராஜ், வெர்ளாளன்விளை பிஷப் அசரியா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அகஸ்டின் பிலிப் மற்றும் சபை மக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment