ஈ.வெ.ராசாலை (பூந்தமல்லி நெடுஞ்சாலை) 6 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முதல்
இரு வழி பாதையாக செயல்படத் தொடங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
அடைந்துள்ளனர்.
ஈ.வெ.ரா. பெரியார் சாலையில் கெங்கு ரெட்டி
சுரங்கப்பாதை சந்திப்பு முதல் ஈகா சந்திப்பு வரை மெட்ரோ ரயில் கட்டுமான பணி
நடைபெற்றதால் கடந்த 2011 நவம்பர் 8-ம் தேதி முதல் ஈ.வெ.ரா சாலை, மேயர்
ராமநாதன் சாலை (கிழக்கு), மேயர் ராமநாதன் சாலை, டாக்டர் குருசாமி பாலம்,
கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை ஆகியவை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டது.
தற்போது மெட்ரோ ரயில் கட்டுமான பணி முடிவடைந் துள்ளதைத் தொடர்ந்து ஒரு
வழி பாதையாக இருந்த மேற்கண்ட சாலைகள் நேற்று முதல் சில மாற்றங்களுடன்
இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஈ.வெ.ரா. சாலையில்
கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை சந்திப்பிலிருந்து ஈகா சந்திப்பை நோக்கி வாகன
போக்குவரத்து நேராக செல்ல அனுமதிக்கப்படுகிறது.
காலை 7 மணி முதல்
மாலை 4 மணி வரை கெங்கு ரெட்டி சுரங்கப் பாதையிலிருந்து தாசப்பிரகாஷ்
சந்திப்பை நோக்கி வலது புறம் திரும்ப தடைவிதிக்கப்பட்டுள்ளது. அத்தகைய
வாகனங்கள் ஸ்பர்டாங் சாலை - பி.டி. ஸ்கூல் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி
உடுப்பி சிக்னல், நாயர் பாலம் வழியாகச் செல்லலாம் அல்லது கெங்கு ரெட்டி
சுரங்கப்பாதை வழியாக சென்று பர்னபி சிக்னலில் கொண்டை ஊசி வளைவாகத் திரும்பி
(யு வடிவ திருப்பம்) செல்லலாம்.
பிளவர்ஸ் சாலை வழியாக ஈ.வெ.ரா
சாலையை அடையும் வாகனங்கள் ஈகா சந்திப்பை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது.
அத்தகைய வாகனங்கள் கெங்கு ரெட்டி சந்திப்பில் கொண்டை ஊசி வளைவாகத் திரும்பி
ஈகா சந்திப்பை நோக்கிச் செல்லலாம். ஈ.வெ.ரா. சாலையில் கெங்கு ரெட்டி
சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் ஈகா சந்திப்பில் வாசு தெருவை நோக்கி
வலதுபுறம் திரும்ப இயலாது. அத்தகைய வாகனங்கள் டெய்லர்ஸ் சாலை சந்திப்பை
அடைந்து கொண்டை ஊசி வளைவாகத் திரும்பி வாசு தெருவை அடையலாம். ஈ.வெ.ரா
சாலையில் டெய்லர்ஸ் சாலை சந்திப்பில், டெய்லர்ஸ் சாலையிலிருந்து ஈ.வெ.ரா.
சாலையை நோக்கி வரும் வாகனங்கள் பள்ளி நேரங்களான காலை 7.30 மணி முதல் 8.30
மணி வரை மற்றும் மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை தவிர மற்ற நேரங்களில்
அமைந்தகரையை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது. மேற்படி வாகனங்கள் ஈகா
சந்திப்புச் சென்று திரும்பி அமைந்தகரையை நோக்கிச் செல்லலாம்.
ஸ்பர்டாங்க்
சாலை இரு வழி பாதையாக மாற்றப்பட்டதை தொடர்ந்து எழும்பூர்
நெடுஞ்சாலையிலிருந்து வந்து கெங்கு ரெட்டி சுரங்கப்பாதையை நோக்கி செல்லும்
வாகனங்கள் பி.டி.ஸ்கூல் சந்திப்பில் இடது புறம் திரும்பி காசா மேஜர்
சந்திப்பில் கொண்டை ஊசி வளைவாகத் திரும்பி கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை
வழியாக ஈ.வெ.ரா. சாலையை நோக்கி செல்லலாம்.
ஈ.வெ.ரா. சாலையிலிருந்து
குருசாமி பாலம் வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை அடையும் வாகனங்கள்
ஹாரிங்டன் சுரங்கப் பாதையை நோக்கி வலதுபுறம் திரும்ப இயலாது. மேற்படி
வாகனங்கள் ஸ்டெர்லிங் சந்திப்பில் கொண்டை ஊசி வளைவாகத் திரும்பி செல்ல
வேண்டிய இடத்துக்குச் செல்லலாம். ஸ்டெர்லிங் சந்திப்பிலிருந்து வள்ளுவர்
கோட்டம் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை அடையும் வாகனங்கள் மேயர்
ராமநாதன் சாலை நோக்கி வலது புறம் திரும்ப இயலாது. மேற்படி வாகனங்கள்
குசலாம்பாள் கல்யாண மண்டபம் சர்வீஸ் சாலையில் திருப்பம் மேற்கொண்டு
செல்லலாம். ஹாரிங்டன் சாலை வழியாக சேத்துப்பட்டு சந்திப்பை நோக்கி வரும்
வாகனங்கள் நேராகவும், வலது புறம் மற்றும் இடது புறமும் திரும்ப
அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஸ்பர்டாங்க் சாலை வழியாக சேத்துப்பட்டு
சந்திப்பை நோக்கி வரும் வாகனங்களுக்கு நேராகவும், வலது புறம் மற்றும் இடது
புறம் திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளது. ஈ.வெ.ரா சாலையில் பாதசாரிகள் சாலையை
கடப்பதற்கு காவலர் வீட்டு வசதி கழகம் எதிரில் பிரத்தியேகமாக வசதி செய்து
தரப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment