பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட 9 பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் இன்று தொடங்குகிறது.
தமிழகத்தில்
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் சார்ந்த
பட்டப்படிப்புகளான பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம், பிபீடி, பிஏஎஸ்எல்பி
(செவித்திறன், பேச்சு மற்றும் மொழி நோய் குறியியல்), பிஎஸ்சி ரேடியாலஜி
மற்றும் இமேஜிங் டெக்னாலஜி, பிஎஸ்சி ரேடியோதெரபி டெக்னாலஜி, பிஎஸ்சி
கார்டியோ பல்மோனரி பெர்பியூஷன் டெக்னாலஜி, பிஎஸ்சி ஆப்டோமேட்ரி, பிஓடி ஆகிய
9 பட்டப்படிப்புகள் உள்ளன.
இந்த 9 பட்டப்படிப்புகளுக்கு 2017-18-ம் கல்வி ஆண்டு மாணவர்
சேர்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் தமிழகம் முழுவதும் உள்ள 22 அரசு
மருத்துவக் கல்லூரிகளில் இன்று தொடங்குகிறது. வரும் 23-ம் தேதி வரை தினமும்
காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்ப
விநியோகம் நடைபெறும்.
ரூ.400 கட்டணம்
மாணவர்கள்
அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு விண்ணப்ப மனுவுடன் தேசியமயமாக்கப்பட்ட
வங்கியில் “செயலாளர், தேர்வுக்குழு, கீழ்ப்பாக்கம், சென்னை-10” என்ற
பெயரில் எடுக்கப்பட்ட ரூ.400-க்கான கேட்பு வரைவோலையை (டிடி) இணைத்து
கொடுத்து விண்ணப்பம் மற்றும் தகவல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம்.
சிறப்பு
ஒதுக்கீடு பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் தனியாக ரூ.100-க்கான கேட்பு
வரைவோலையை இணைக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர்
விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள்.
அவர்கள் விண்ணப்ப மனுவுடன் சான்றொப்பம் பெறப்பட்ட 2 சாதி சான்றிதழ் நகலை
சமர்ப்பித்து விண்ணப்பத்தை பெறலாம். www.tnhealth.org மற்றும்
www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் இருந்து விண்ணப்பம் மற்றும்
தகவல் தொகுப்பினை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
பூர்த்தி
செய்யப்பட்ட விண்ணப்பங்களை செயலாளர், தேர்வுக் குழு,எண்.162,
ஈ.வெ.ரா.பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010 என்ற
முகவரிக்கு நேரிலோ, தபால் மூலமாகவோ வரும் 24-ம் தேதி மாலை 5 மணிக்குள்
சமர்ப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment