Menu

Friday 18 August 2017

நெல்லை பல்கலையில் சர்வதேச புகைப்பட தினம்

திருநெல்வேலி, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறையில் சர்வதேச புகைப்பட தின கொண்டாட்டம் நடந்தது.
சர்வதேச புகைப்படதினத்தை முன்னிட்டு புகைப்பட மற்றும் புகைப்படக் கருவிகள் கண்காட்சி, புகைப்படக் கலைஞர்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடந்தது. ஆவண புகைப்படக் கலைஞர் செல்வபிரகாஷ், பத்திரிக்கை புகைப்படக்கலைஞர் ராஜா சிதம்பரம், திரைப்படத் தயாரிப்பாளர் தனஞ்செயன் ஆகியோர் பங்கேற்றனர்.
செல்வபிரகாஷ் பேசுகையில்'' தன் தோளில் கேமரா இல்லாத ஒரு மனிதன் தன் விருப்பத்தையும் இலக்கையும் நன்கு அறிவான். புகைப்படத் துறையில் தொழில்நுட்பத்தை புகுத்துவது என்பது குறைந்த அளவே முக்கியத்துவமுடையது. ஆனால் புகைப்படத்தில் இடம் பெறப்போகும் கதை, உணர்வு இவை மிகுந்த முக்கியத்துவமுடையது.அதுவே புகைப்படம் வாயிலாக திறமையை பேசுங்கள்.
தொழில்நுட்பத்துக்கு அளிக்கும் மிகுதியான முக்கியத்துவத்தால் புகைப்படம் அதன் அழகியலை இழக்கிறது. போர்ட்ரைட் புகைப்படங்கள் ஆதி கால ஓவியங்களின் சாயலில் இருப்பதற்கு காரணம் நம் சமூகம் மிகைபடுத்தப்பட்ட உருவப்படங்களை போற்றியே பழக்கப்பட்டது தான். புகைப்படம் என்பது தன் நோக்கத்தை பதிவு செய்வதாக இருக்க வேண்டும்.'' என்றார்.
புகைப்பட கண்காட்சியை துணைவேந்தர் பாஸ்கர் துவக்கி வைத்தார். அப்போது பதிவாளர் ஜான் டி பிரிட்டோ மற்றும் துறை பேராசிரியர்கள் உடனிருந்தனர். நெல்லை ராணி அண்ணா கல்லூரி, தூய சவேரியார் கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் , ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
தொடர்பியல் துறை தலைவர் பால சுப்பிரமணிய ராஜா மற்றும் பேராசிரியர் ஞான டி ஹன்ஸ் ஆகியோர் நிகழ்வினை ஒருங்கிணைத்தனர்.

No comments:

Post a Comment