Menu

Friday 18 August 2017

தூத்துக்குடியில் காபி வித் கலெக்டர் நெல்லையில் கால் யுவர் கலெக்டர் தென்மாவட்டங்களில் கலக்கும் இளம் ஐ.ஏ.எஸ்.,கள்

திருநெல்வேலி, தூத்துக்குடியில் காபி வித் கலெக்டர் என்ற பெயரில் பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடும் புதுமை நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கிவைத்தார்.
அமைதிப்பூங்காவான தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்.,அதிகாரியாக பணியாற்ற வேண்டும் என்பதே வடஇந்தியவர்களின் கனவாக உள்ளது. அதி<லும் ஏதாவது கிராமப்புற மாவட்டம் ஒன்றில் கலெக்டராக சிறப்பாக
பணியாற்ற வேண்டும் என்பது இளம் ஆட்சியாளர்களின் உத்வேகமாக உள்ளது.
நெல்லையில் கலெக்டராக பொறுப்பேற்றுள்ள சந்தீப் நந்தூரி, பொதுமக்கள் பயன்பெறும் வகையில்
அன்புச்சுவர் எழுப்பினார். அங்கு ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் உடைகள்,
பைகள், காலணிகள், பொம்மைகள் என அனைத்தையும் மக்கள் மனமுவந்துவிட்டுச்செல்கின்றனர்.
நெல்லையில் ஏற்பட்ட அன்புச்சுவரின் வெற்றியால் வடமாவட்டங்களில் இந்த திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கல்லூரிகள், மத்திய அரசு அலுவலகங்களிலும் அன்புச்சுவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இதே போல தூத்துக்குடியில் புதிதாக பொறுப்பேற்றுள்ள கலெக்டர் வெங்கடேஷ், பல்வேறு நலப்பணிகளை மேற்கொண்டுவருகிறார். நேற்று முதன்முறையாக "காபி வித் கலெக்டர்" என்னும் புதுமையான நிகழ்ச்சியை நடத்தினார். இதில் தூத்துக்குடி காமராஜ் கல்லூரி, புனித மரியன்னை கல்லூரி, சோரீஸ்புரம் அரசு பள்ளி, ஹோலிகிராஸ் பள்ளி மாணவ, மாணவிகள்
20 பேர் பங்கேற்றனர். இவர்களுடன் மாவட்ட எஸ்.பி.,மகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர். 

தூத்துக்குடியில் நச்சுவாயுக்களை ஏற்படுத்தும் ஆலைகளின் மாசுகட்டுப்பாட்டிற்கு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஏன் தாமிரபரணி தண்ணீரை நிரந்தமாக தேக்கிவைக்க தூத்துக்குடியில் ஒரு அணை கட்டக்கூடாது. ஒரேடியாக மழை வெள்ளம், அல்லது வறட்சி என்ற நிலையை மாற்ற ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என துளைத்தெடுத்தனர். குறிப்பாக பத்திரிகையாளர்களே கேட்கும் தயங்கும் கேள்விகளையும் கேட்டனர். அனைத்திற்கும் கலெக்டர் வெங்கடேஷ் பதிலளித்தார். மாணவ, மாணவிகள் சமூக விழிப்புணர்வை பாராட்டினார்.

ஒவ்வொருவாரமும் இத்தகைய நிகழ்ச்சி ஏற்படுத்தப்படும் என்றார். நிகழ்ச்சியில் சப் கலெக்டர்
தீபக் ஜேக்கப், உதவி கலெக்டர் (பயிற்சி) சரவணன், மாநகராட்சி கமிஷனர் அல்பி ஜான் வர்க்கீஸ்,
மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், முதன்மை கல்வி அலுவலர் அனிதா, மக்கள் தொடர்பு அலுவலர் நவாஸ்கான் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment