Menu

Monday, 28 August 2017

இரயில்வேத்துறையில் சீர்திருத்தம் இன்னும் எவ்வளவோ தேவை. - அனுபவக் கட்டுரை

நேற்று (27.08.2017) கொடை ரோட்டில் இருந்து நாசரேத்துக்கு பாசஞ்சர் ட்ரெயினில் பயணம் செய்ய நேரிட்டது. அந்த பயணம் இரயில்வேத்துறையில் இன்னும் எவ்வளவு சீர்திருத்தம் தேவை என்பதை வெளிக்காட்டியது. நீங்களும் என் கருத்தோடு ஒத்துப்போவீர்கள் என்று நம்புகிறேன். சுதந்திரம் அடைந்து இத்தனை வருடம் கழித்தபின்னும் இன்னும் நாம் முன்னேற வேண்டியது எவ்வளவோ தூரம். சுமார் 5 மணி நேரத்தில் பேருந்தில் பயணம் செய்ய வேண்டிய தூரத்தை  9 மணி நேரம் ஓட்டுகிறார்கள். 

 பழனி - திருச்செந்தூர் ரயில், நெல்லையில் திருநெல்வேலி- திருச்செந்தூர் என்று மாற்றப்படுகிறது.

ஏற்கனவே நின்று நின்று கடுப்பில் வந்தவர்கள் திருவைகுண்டத்திலும் நிறுத்தப்பட்டபோது கடுப்பில்...........

9.30 க்கு வர வேண்டிய டிரெயின் 10.30 க்கு ஸ்டேஷன் க்கு வந்தது. அதுவும் முன்னால் சில பெட்டிகள் யாரும் இல்லாமல் காலியாக இருக்க, பின்னால் இருந்த பெட்டிகளிலே கூட்டம் இருந்தது. இதுவும் ஒருவகை குறைபாடுதான். எவ்வளவோ தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் எந்த பெட்டியில் எவ்வளவு ஆட்கள் இருக்கிறார்கள்? எவ்வளவு சீட் காலியாக எந்த பெட்டியில் உள்ளது என்று அடுத்த ஸ்டேஷனில் ஒரு ஸ்கீரினில் ஓட வைக்கும் அளவு டெக்னாலஜி இல்லாதது பெருத்த சோகம். 

இதிலும் கொடுமை எந்த எக்ஸ்பிரஸ் டிரெயின் கிராஸ் செய்ய வேண்டுமானாலும் இந்த பாசஞ்சர் தான் நிற்க வேண்டி உள்ளது.
மதுரையில் – 1 மணி நேரம்
சாத்தூரில்  - 1 ½ நேரம்
இன்னும் ஒரு ஸ்டேஷனில் 1 மணி நேரம்

இதே நிலைதான் திருச்செந்தூர் எக்ஸ்பிரஸில் பயணம் செய்பவர்களுக்கும் எந்த டிரெயின் கிராஸ் செய்ய வேண்டுமென்றாலும் நம்ம டிரெயின் தான் பலிகடா. இதுவும் ஒருவகையில் நம் நாட்டின் பின் தங்கிய நிலைதான். போதிய இரயிவே டிராக்குகள் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

ஒரு வழியாக மாலை 5 மணி அளவில் திருநெல்வேலி வந்தது அந்த பாசஞ்சர். சரி இன்னும் ஒரு ¾ மணி நேரத்தில் நாசரேத் போய் விடலாம் என்று நினைக்கையில், திருநெல்வேலி – திருச்செந்தூர் பாசஞர் டிரெயினுக்கு பதிலாக இந்த டிரெயினை மாற்றிவிட்டு கோவையில் இருந்து 6.30 க்கு வந்த டிரெயினில் இருந்து இறங்கிய மக்களையும் அழைத்துக் கொண்டு கிளம்பியது டிரெயின். சரி இனியாவது ஒரு ¾ மணி நேரத்தில் கிளம்பிடிடும் என்று நினைத்தபோது திருவைகுண்டத்தில் ஒரு 15 நிமிடம், செந்தூர் எக்ஸ்பிரஸ்க்காக. ஒரு வழியாக 8 மணிக்கு நாசரேத்துக்கு வந்தது. பாவம் பழனியில் இருந்தே வந்த மக்கள். எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள்.

இவை எல்லாம் நாம் இன்னும் போக வேண்டியது எவ்வளவோ தூரம் என்பதைத் தான் காட்டுகிறது. 

முதல்ல டாய்லெட்டுல ஒரு வாளி வைக்க சொல்லுங்கப்பா.

ஒரு வேலை வெட்டியும் ஊரில் இல்லாமல் இருந்தால் ஹாயாக டிராவல் செய்யத் தான் இரயில் பயணம் லாய்க்கு போல.

இதே போல் தான் அடிக்கடி இந்த பாசஞ்சர் வருகிறது என்று கேள்வி. உங்களில் யாரும் இந்த நரக வேதனையை அனுபவித்துள்ளீர்களா?

 சரி மத்திய அரசு தான் வஞ்சித்து விட்டது. மாநில அரசாவது கை கொடுக்கும் என்று நாசரேத் பேருந்து நிலையத்துக்கு வந்தால், 8.30 க்கு ஷ்ரீ ரெங்கன் பேருந்து பேய்க்குளத்துக்கு போகும் ஆனால் ஆள்கள் எண்ணிக்கை இருந்தால் தான் போகும் என்றார்கள். (ஷ்ரீ ரெங்கன் - அதாங்க அந்த காலத்து எஸ்.டி.கே.என், ஆர்.கே.எஸ் ஸின் தற்கால பெயர் தான் ஷ்ரீ ரெங்கன்) 8.20 க்கு போல் பேருந்து வந்தது. சரி ஏறி இருக்கலாம் என்று போனால் டிரைவர் அண்ணன் சொன்னார், ”ஸார், பேருந்து ரிப்பேர் பார்க்க நெல்லை போகிறது என்று”. பேருந்தின் போர்டோ ,தென் திருப்பேரை என்று எழுதி இருந்தது. 

நம்ம RKS / STKN ஆ இருந்தா இப்படி கை விடுமா. 

பேருந்து நிலையத்தில் பல பேர் சொன்னார்கள் , பேருந்து சில நேரம் தான் பேய்க்குளம் போகும் என்று. கடைசியில் மாநில அரசும் கழுத்தை அறுத்து விட்டது.

பிறகு எப்படியோ ஊர் வந்து சேர்ந்தது வேறு கதை.
 
சரி இப்போது தப்பு யார் பெயரில்? ஒருத்தர் இருந்தாலும் பேருந்து ஓட வேண்டும், இரயில் ஓட வேண்டும் என்று நினைக்கிற நம் பெயரிலா? அல்லது அரசோ, ஓனரோ நஷ்டப்படக் கூடாது என்று நினைக்கிற டிரைவர் அல்லது இரயில்வே நிர்வாகம் மீதா?

No comments:

Post a Comment