Menu

Tuesday, 29 August 2017

பழனியப்பபுரம்- சின்னமாடன் குடியிருப்பு ரோடு வழியாக பயணம் செய்த தம்பதியினரிடம் வழிப்பறி

நாசரேத் அருகே கணவருடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம் நகை பறிப்பு

நாசரேத்: நாசரேத் அருகே கணவருடன் பைக்கில் வந்த ஆசிரியையிடம்  நகை மற்றும் பொருட்களை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவைகுண்டம்  தெற்கு முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மனைவி அலிஷ்மேரி (43). 
 
நாசரேத் அருகேயுள்ள பிரகாசபுரம் தனியார் மெட்ரிக்  மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தம்பதியர் தங்களுக்கு சொந்தமாக மூன்றடைப்பு அடுத்த பாணாங்குளத்தில்  உள்ள வீட்டை நேற்று முன்தினம் பார்வையிட பைக்கில் சென்றனர்.

பின்னர் இரவு 7.30 மணி அளவில் நாசரேத் அருகேயுள்ள  பழனியப்பபுரம்- சின்னமாடன் குடியிருப்பு ரோடு வழியாக மீண்டும் திருவைகுண்டத்திற்கு திரும்பிக்கொண்டிருந்தனர். அப்போது ஒரே பைக்கில் அவர்களை பின்தொடர்ந்து  வந்த மர்ம நபர்கள் இருவரும், ராமகிருஷ்ணன் பைக்கை முந்திச் சென்று மறித்தனர்.  பின்னர் அவதூறாக பேசிய அவர்கள்,  அலிஷ்மேரியின் கழுத்தை  நெரித்ததோடு அதில் கிடந்த 9 பவுன் நகை மற்றும் செல்போன், ஏடிஎம்  கார்டு, வாட்ச் பறித்தனர். இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும்.  இதைத் தடுக்கமுயன்ற ராமகிருஷ்ணனையும் அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு பைக்கில்  பறந்துசென்றனர். 
 
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த நாசரேத் இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம், மர்ம நபர்களை தேடி வருகிறார்.

No comments:

Post a Comment