Hi Readers

...... Dear +2 students .....அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்....

Thursday, 3 August 2017

ஒரே பெயரில் பல என்ஜினீயரிங் கல்லூரிகள்: மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் வேண்டுகோள்

கலந்தாய்வில் கல்லூரிகளின் பெயர்கள் ஒன்று போல இருப்பதால் மாணவர்கள் கலந்தாய்வு கோடு எண் இருப்பது தெரியாமல் குழப்பம் அடைந்து அவர்கள் விரும்பும் கல்லூரி அல்லாமல் வேறு கல்லூரியை தேர்ந்து எடுத்து விடுகிறார்கள்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் கூறியதாவது:–

கலந்தாய்வுக்கு அழைக்கப்படும் மாணவர்கள், ஒரு நாள் முன்பே அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வந்து தனது ‘கட் ஆப்’ மதிப்பெண்ணுக்கு எந்த கல்லூரியை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது என்றும், அந்த கல்லூரியின் கலந்தாய்வு கோடு எண்ணையும் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்காக அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள திரையில் கல்லூரியின் கோடு எண் வெளியிடப்படுகிறது. இதனை மாணவர்கள் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

உதாரணமாக ஒரு மாணவர் அதிக ‘கட் ஆப்’ மதிப்பெண் பெற்றிருப்பார். ஆனால் கலந்தாய்வு கோடு எண் தெரியாமல் குறைந்த மதிப்பெண்ணுக்கு கிடைக்கக்கூடிய கல்லூரி அவருக்கு கிடைத்து விடும். பின்னர் இதுபற்றி புலம்புவதில் அர்த்தம் இல்லை.

எனவே மாணவ–மாணவிகள் கலந்தாய்வு அறைக்கு செல்லும்போது கவனமாக கல்லூரிகளின் கலந்தாய்வு கோடு எண்களை தெரிந்து கொள்ளுங்கள். ஒரு முறை தேர்ந்து எடுத்தால் அதுதான் இறுதி.

இவ்வாறு பேராசிரியர் எஸ்.கணேசன் தெரிவித்தார்

No comments:

Post a Comment