திருநெல்வேலி, சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம்,
நேற்று துவங்கியது.
தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளன. இதில், 396 இடங்களும், 22 சுயநிதி கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டிற்கு, 859 இடங்களும் உள்ளன. அத்துடன், சுயநிதி கல்லூரிகளின் நிர்வாக இடங்களுக்கும், இந்தாண்டு
அரசே மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.இதற்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.
அரசு சித்த மருத்துவக்கல்லூரிகள் நெல்லை, சென்னையில் மட்டுமே <உள்ளன. நெல்லை அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் விண்ணப்பங்களை முதல்வர் திருத்தணி வழங்கினார். மொத்தம் ஆயிரத்து 500
விண்ணப்பங்கள் வந்துள்ளன. வரும் 30ம் தேதி வரை, விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31க்குள் அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment