Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Wednesday, 9 August 2017

ஜியோவில் வேலை.. விரைந்து விண்ணப்பிக்க அழைப்பு

ஜியோ நிறுவனம், தனது நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள  1,900 விற்பனை மற்றும் விநியோகத்துறை பணியிடங்களுக்கான அறிவிப்பை தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (www.jio.com) வெளியிட்டுள்ளது.
இதற்கு பத்தாம் வகுப்பு முதல் எம்பிஏ பட்டதாரிகள் வரை அனைவரும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விற்பனைப் பகுப்பாய்வு மற்றும் திட்டமிடல், கோரிக்கை உருவாக்கம், விற்பனை செலவு மற்றும் வரவு செலவுத் திட்டம், விற்பனை மண்டலங்களை நிறுவுதல் மற்றும்  வாடிக்கையாளர் கவனம், நல்ல தகவல் தொடர்பு திறன், சிக்கல் தீர்க்கும் திறம் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் பற்றிய அறிவு, விற்பனை ஒருங்கிணைப்பு போன்றவற்றில் திறன் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தில்லி, கொல்கத்தா, மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா மற்றும் ஹிமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாடு முழுவதும் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றது.

ஜியோ நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி சென்ற மாதம் வெளியிட்ட அறிவிப்பில் விலை இல்லா 50 ஆயிரம் ஜியோ போன்களை விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்தார். அதனைச் சமாளிக்கவே இந்த வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment