மத்திய அரசின் மண்டலங்களை இணைக்கும் விமானச் சேவைத் திட்டத்தின் கீழ்
அடுத்த ஆண்டு சென்னையில் இருந்து ராமேஸ்வரம், தஞ்சாவூர், வேலூர்
நகரங்களுக்கு விமான சேவை தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது.
கடந்த 2016ம் ஆண்டே விமான நிலையம் தொடங்குவதற்கான நிலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டு விட்டது. ஏறக்குறைய 50 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுவிட்டது.
ஏராளமான வடமாநில மக்கள் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரிக்கு வருகை தருகிறார்கள். மேலும், ஏலகிரி சுற்றுலா தளம், வி.ஐ.டி. பல்கலைக்கழகம், ஆகியவை இருப்பதால் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் பாரம்பரிய இந்துமக்கள் சுற்றுலாதளம் என்பதால் இங்கு முக்கியத்தும் அளிக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் இருந்து இந்துக்கள், ராமேஸ்வரத்துக்கு எளிதாக பயணிக்கும் வகையில் அங்கு விமானச் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்காக உச்சப்புளி விமான நிலையத்தை தயார் செய்து வருகிறோம். தஞ்சையில் விமானப்படை தளம் இருப்பதால், அதையே பயன்படுத்தி, விமானநிலையமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment