Menu

Tuesday, 8 August 2017

வித்யாதன் கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''சமூகத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு சரோஜினி தாமோதரன் அறக்கட்டளையின் மூலமாக வித்யாதன் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் 2 லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
பொதுத் தேர்வில் 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறன் மாணவர்கள் 75 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகஸ்ட் 31. மதிப்பெண் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், மாணவர் புகைப்படம் ஆகிய ஆவணங்களையும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
10-ம் வகுப்பு முடித்து 11-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.6 ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
12-ம் வகுப்பு முடித்து கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை அவர்கள் படிக்கும் படிப்புக்கேற்ற முறையில் உதவித்தொகை வழங்கப்படும்.
உதவித்தொகை பெற www.viyadhan.org, http://www.viyadhan.org என்ற இணையதளங்களில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு 7339659929, 08042995209 என்ற செல்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment