அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை காலாண்டு
தேர்வுக்குமுன் சுற்றுலா அழைத்துச்செல்ல திட்டமிட்டதால் பள்ளிக்கல்வி
இயக்குனரகம் சுற்றுலாவிற்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு கல்வியாண்டிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம்
வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களை கல்வி சுற்றுலா
அழைத்துச்செல்வது வழக்கம். பள்ளிக் கல்வித்துறை வழிமுறை, அறிவுரை
அடிப்படையில் மாணவர்கள் சுற்றுலா அழைத்துச்செல்லப்படுவர்.
அதன்படி, இந்த கல்வி ஆண்டிற்கு அனைத்து மாவட்டங்களிலும் அரசு மற்றும்
தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுக்கு முன் கல்விச்சுற்றுலா செல்ல
திட்டமிட்டன. சில தனியார் பள்ளிகள், 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களையும்
சுற்றுலா அழைத்துச்செல்ல முடிவு செய்துள்ளன.
இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி வீதம்
அதிகரிக்கப்பட வேண்டும் என்பதால் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்சென்று
நாட்களை வீணடிக்க வேண்டாம் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி
உள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:
தனியார் பள்ளிகளில் கல்வித்துறை அனுமதியுடன் மாணவர்களை சுற்றுலா அழைத்துச்
செல்வார்கள். ஆனால் இந்த கல்வி ஆண்டு பொதுத்தேர்வில் தேர்ச்சி வீதம்
அதிகரிக்க வேண்டும் என்பதால், மாணவர்களின் நலன்கருதி சுற்றுலா
அழைத்துச்செல்ல பள்ளிக்கல்வி இயக்குனரகம் வாய்மொழியாக தடை விதித்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரையும், பிளஸ் 1
வகுப்பு மாணவர்களையும் சுற்றுலா அழைத்துச்சென்றனர். ஆனால் இந்த ஆண்டு பிளஸ்
1 வகுப்பும் பொதுத்தேர்வின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதால் பிளஸ் 1
மாணவர்களுக்கும் சுற்றுலா அழைத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு
அவர்கள் கூறினர்.
No comments:
Post a Comment