Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Sunday, 6 August 2017

இறுதிப் போட்டியில் வெண்கலம் வென்ற போல்ட்

உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் உசேன் போல்ட் மூன்றாவது இடம் பிடித்து அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
லண்டனில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் மூன்றாவது இடம் பிடித்தார். இப்போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜஸ்டின் கட்லின் தங்கப் பதக்கம் வென்றார்.
உசைன் போல்ட் 2017-ம் ஆண்டு தடகள தொடருடன் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில், தனது இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கத்தை  வெல்ல முடியாமல் போனதற்கு அவரது ரசிகர்கள் அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து போல்ட் கூறும்போது,  நான் முழு உடல் தகுதியுடன் இல்லை என்று எண்ணுகிறேன். ஜஸ்டின் சிறந்த போட்டியாளர். நான் அவருடன் போட்டியிட்டத்தில் பெருமை கொள்கிறேன். அவர் சிறந்த மனிதர்” என்றார்.
30 வயதான உசைன் போல்ட் என்கிற உசைன் செயின்ட் லியோ போல்ட், ஜமைக்கா நாட்டினைச் சேர்ந்த தடகள விளையாட்டு வீரர். 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4 X 100 மீட்டர் என அனைத்திலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்.

No comments:

Post a Comment