Hi Readers

...... Dear +2 students .....அனைவரும் நன்கு தேர்வு எழுதி சிறப்பான மதிப்பெண் பெற்று வாழ்வில் சிறப்படைய வாழ்த்துகள்....

Sunday, 6 August 2017

சாத்தான்குளம் அருகே பைக் விபத்தில் வியாபாரி பலி

சாத்தான்குளம்: சாத்தான்குளம் மாணிக்கவாசகபுரம் தெருவை சேர்ந்தவர் நடராஜன்(46). சோடா வியாபாரம் செய்து வந்தார். திருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பேண்ட் வாத்திய நிகழ்ச்சிக்கும் சென்று வந்தார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நடராஜன், சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளம் சென்றுவிட்டு அங்கிருந்து நள்ளிரவில் பைக்கில் சாத்தான்குளத்திற்கு வந்தார். அப்போது வேலன்புதுக்குளம் எல்லையில் சென்றபோது சாலையோரம் உள்ள ஊர் பெயர் பலகை மீது பைக் மோதியது. இதில் நடராஜன், சம்பவ இடத்தில் பலியானார். இறந்த நடராஜனுக்கு மனைவி ஜெயசீலி(42) மற்றும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஜெயசீலிக்கு கடந்த ஒருவாரத்திற்கு முன் 2வதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. விபத்து குறித்து சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். இச்சம்பவம் உறவினர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment