Hi Readers

...... Departmental Exam May 2025 Result Published. ALL THE BEST 👍 ..

Thursday, 3 August 2017

ஸ்ரீவைகுண்டம், மணியாச்சிக்கு புதிய டிஎஸ்பிகள் நியமனம்


தூத்துக்குடி: தமிழகம் முழுவதும் 31 டிஎஸ்பிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் ஸ்ரீவைகுண்டம், மணியாச்சிக்கு புதிய டிஎஸ்பிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  தமிழகம் முழுவதும்  31 டிஎஸ்பிகளை டிஜிபி ராஜேந்திரன் பணியிடம் மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி நெல்லை மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சகாயம் ஜோன்ஸ் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்ட நிலமோசடி தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஞானசம்பந்தன் பணியிடம் மாற்றம்செய்யப்பட்டு மணியாச்சி டிஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல் மாநிலம் முழுவதும் 31 டிஎஸ்பிகள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment